Thursday, 20 September 2012

காதல் பதிவுகள்-5

பெரிய தியாகங்களில் மட்டுமல்ல சின்ன அக்கறையிலும் வாழ்வது காதல் என்றுணரும் காதலன் ஒருவனின் வரிகள்       


அருகே அவள் முகம் பார்க்கையில்
      ஆண்டுகள் பல சிறகடித்திருந்தன
பிறப்பேனும் ஒன்று மறுமுறை இருந்தால்
      அதில் ஓர் இரவு தான் வாழ்வென்றால்

ராத்திரி நிலவொளியை ரசிக்க வேண்டும்
      அவள் புன்னகையில்
மிதக்கும் மேகம் மறைக்காத ஒளியினை போல்
     ஆழ்கடல் எண்ணங்களில் அழியாசுடர்கிறாள்

Wednesday, 4 January 2012

காதல் பதிவுகள்-4

ஆன்சைட்டு மாப்பிள்ளை என
ஆசையாய் கட்டி வைத்தீர்கள்
ஆனால்
அவர் இதமாய் இரவு அணைத்துக்கொள்வது
ஆறுபதாயிரம் ருபாய் மடிக்கணிணியை

ஆடம்பரமாய் இருக்கிறேன்
என ஊரார் பேசினாலும்
உள்ளுக்குள் புழுங்கி கொண்டுருக்கிறேன்
அணையா நெருப்பாய்

கழுத்துக்கு தங்க மாலைகள்
போட்டு அனுப்பி வைத்தீர்கள்
ஆனால்
அவர் இன்று வரை பாசமாய் சூட்டியதில்லை
என் தலையில் மல்லிகை

காதலால் உருகியவனுக்கு மாத சம்பளம்
ஆராயிரம் என்றாலும்
நிறைவாய் மகிழ்த்திருப்பேன்
அவனுடன் என் வாழ்வை

நானும் ஒரு சுயநலவாதி ஆகியிருக்கலாம்
என்ன செய்வது
இரண்டாவதாய் இருக்கும் ராஜியின் திருமணம்
புதைத்தது என் காதலை

எல்லவற்றையும் உங்களிடம்
சொல்லி அழுதிருக்கலாம்
தங்களின் இரத்த கொதிப்போ என்னை கிழிக்க செய்துவிட்டது
இந்த கடிதத்தை

Tuesday, 3 January 2012

காதல் பதிவுகள்-3

*
சொல்ல மறந்த என் காதல்
நினைவுகளாக மீண்டும் வந்தது
"உன் திருமண அழைப்பிதழாக"

*
சேர்ந்த காதல்கள் திருமணத்தில்,
சேராத காதல்கள் காதலனின் டைரியில்

*
ஸ்ட்ரா பெர்ரி வாங்கி சென்ற
என் காதல்
பிளாக் பெர்ரி வாங்கி தந்தவனிடம்
விலை பேசப்பட்டது

Saturday, 26 November 2011

காதல் பதிவுகள்-2

*
பார்க்கறிய சொந்தங்கள்
வயிரார விருந்துகள்
மனதார வாழ்த்துக்கள்
இவற்றுக்காக நான் இழந்தது
உன் இதயம்
என் காதல்

*
கோவில் தீபம் எற்றும் போது
பதறிய என் மனம்
குடிக்கார கணவனால்
தீக்கிரையான போது
ஏனோ மரத்து போனது

*
நேற்று வகுப்பில்
நீயோ - கடைசியாக
நானோ - முதல்வனாக
இடையில் வந்த காதல் தலைகீழாக்கியது
இன்று வாழ்க்கையில்
நீ - நயாகராவில் கணவனுடன்
நான் - நைந்த துணியில் கனவுகளுடன்

சுமை

நேற்று பார்க்க வந்தவன்
இன்று குடியேறி
நாளை வரப்போகும் மகனுக்காக
தன் பெற்றோர் போலவே காத்திருந்தான்
முதியோர் இல்லத்தில

காதல் பதிவுகள்

*
ஓற்றை ரோஜாவும்

அழகாய் சிரித்தது

அவளின் ஒர பார்வையில்

*
கரும்புள்ளியில் விழுந்த எதுவும்

திரும்பி வராதாம்

இயற்பியல் அறிந்தேன்

உந்தன் கூந்தலில்

*

காதல் இருந்த என் பர்சில் கணமில்லை

அழகிருந்த உன்னிடம் ஏனோ கொடுக்க மனமில்லை

அதனால் உன்னை

எதிர் பார்த்த என்னிடம்

எதிர்காலம் இல்லை என விலகி சென்றாய்

விடுமுறை பயணம்

உயிர் வரை இனித்தது
ஊருக்கு செல்லுகையில் கொடுத்த
ஓர் முத்தம்