Friday 21 October 2016

புலவி

எண்ணத்தில் உன்னை நிரவிக்கொண்டு
எழும் சொற்களை முதற்கொண்டு
எழுத்தாணி முனையில் துளையிட்டு
முறியில் உன்னை தொடுத்து வைத்தேன்.

பட்டின் சாலை வழி
செல்லும் பெண்ணே
குறுஞ்செய்தியில் புன்னகை உரித்து
ஏனடி கூட்டினுள் மறைகிறாய் ?

மறைப்பதினால்
தாழ் அடைப்பதினால்
படிக்க மறுப்பதினால்
தாழாது என் தமிழ் என்பேன்
நீ நிந்தித்தால்
என் கவி துறப்பேன்.

தவிர்ப்பதினால்
நம்மை பிரிப்பதினால்
என்னை எரிப்பதினால்
முழ்காது என் ஓர்மை என்பேன்
உன் விழி விடுத்து
தனி உலகம் காண்பேன்.

Meaning:
புலவி- பொய்யான கோபம்
ஓர்மை- மனம்

கரு: ஊடலின் விளைவால் பேசாதிருக்கும் தோழியின் மேல் சினத்துடன் எழுதும் தோழனின் வரிகள்.
 கவிஞர் "வைரமுத்து" வரிகளிலிருந்து inspire ஆகி எழுதிய வரிகள்.
நன்றி -"டுயட்"   திரைப்படம்

Wednesday 19 October 2016

மௌனம்

அலைப்பேசி முனையில்
மொழிகளற்ற சலனம்
அம்மௌத்திற்கும் மயக்கம் உன்டெனில்
அழைத்தது நீயாக இருக்க வேண்டும்

சொல்லின் வளி மறித்து
வலியினில் கீறாதே பெண்ணே
சொந்தமற்ற நிழலென
தனிமையில் தீயிட்டு கொள்கிறேன்

எட்டா உயரந்தனில்
கிட்டா தேன் கூடு நீயெனில்
என்றோ உன்னிடம்
நேர துளிகள் கவரும்
கால கள்வன் நான்

நரம்பிழந்து பேசாமொழி தரித்த
யாழ் நானடி
கல்லறை தீவினில் புதையும் முன்
தாள் திறந்து தாலாட்டுவாயா

பாறைகளில் செய்த மனம் உனதென
மூங்கில் காட்டினுள் மறைந்து கொண்டால்
பூ துளைத்திடும் பொன்வண்டாவேன்
நேசத்தின் புல்லாங்குழல் இசைத்திட

ஒளியின் விரைவில்
ஒலித்திடுவாய் என
காத்திருக்கிறது எம் செம்மொழி

கரு: அலைப்பேசியில் பேச மறுத்து மௌனமாய் இருக்கும் தோழிக்கு, தோழனின்  கவிதை

Friday 14 October 2016

தோழி

என் விழி பூக்களில்
உன் பிம்ப துகள் கழிந்து
இன்றோடு ஒரு திங்கள் முடிகிறது.

சுடும் பகல் தேடும்
திங்களின் அருமை
தோழியின் அருமை -பிரிவில்

துயரின் வலிதனை
என்னுள் ஏற்றிவைத்து
பயண சுமைதனை நீ வைத்துக்கொண்டாய்
வாழ்வின் வழிதடத்தில்
எங்கேனும் வைத்திருக்கிறாயா
நம் நினைவின் நிழற்படம்?

உறவில்லா சிப்பியென
கடலில் ஒளிந்திருந்தேன்
கவிதை பவழம் கோர்க்க வைத்தாய்
மாலை  வந்து சேரும் முன்பே
ஏனடி விண்மீன் தனை களவாடினாய்.

முக்கடல் சுழ
குடாநாடென உயர்ந்திருந்தேன்
முறிவின் முனையில்
எம் மனம் உடைந்ததடி
ஏனடி தீவாய் விலகிச்செல்கிறாய்.

கலங்கும் உன் கண்கள் துடைக்க
எதிரே என் கைக்குட்டையில்லை
புத்தரை போன்ற மௌனத்தை வடிக்க
நான் ஒரு கவிஞனில்லை

யாருமற்ற உலகினில் யாரோ ஒருவரென
படிக்கும் இளவஞ்சியே
தன்னை விடுத்து உன்னுள் நோக்கினால்
என் பெயர் எஞ்சியிருக்கும்

காதலி எனில்
காத பக்கம் எழுதி இருப்பேன்
அதற்கும் மேல் ஒரு தோழி நீ

Monday 10 October 2016

அவள் பெயர் மாயா




சலனமற்று கடக்கும் மேகத்தின் கீழே
  மௌனமாய் தவமிருக்கும் கல் படுகையில்                             
பனியின் நீர்திரை சூழ
    கொஞ்சம் இருக்கமாய் அணைக்கிறது காதல்
மங்கை அவள் ஸப்ரிச நுண்ணலையில்
    கள்ளுண்ட தும்பி என னது மனது.

கருவண்ண சிகரங்களை குறிக்கோளியிட்டு
   காதில் மெதுவாய் கிசு கிசுத்து                                                     
மதியுற் வெண் பிறை உகிரியினை கோர்த்து
    அனிச்ச மென் திரை கீறல் தீற்றினாள்.

ஜன்னலோரம்  மழை துளியென
     மெலிதாய் கழியும் நொடிகளில்
இரு கைகளின் ஓர் இழையில்
     விண்மீன் எண்ணி விரல்களை களைத்தோம்.

வளியின் நெறி மறித்து
   விழியினில் புனல் சேர
குழலின் இடர்வனத்தில் கன்னம் தோய்த்து
  கன்னியின் செவ்விதழிலில் முத்தம் மொழிந்தேன்
வெண் முறுவல்களை வாலெயிறு கரைத்திடும்
பொழுதினிலே-
  இமைகளுக்குள் மறைந்திட்டன முள்ளெயிறு.


மேனியை கிழித்தெழும் செங்குருதியென
 தென்றலிற்கு வழி வைத்து விலகின இதழ்கள்
இன்னும் ஒருமுறை இறுக்கம் தரித்து கொள்ள
  இரவின் மென் போர்வையில் மறைந்துகொண்டோம்
கூடல் முடியும் முன்பே
  கனவோடு கலந்திட்ட என்னவளின் பெயர் -மாயா.


Meanings:
மதியுற் வெண் பிறை உகிர்- நிலவை விட வெண்மையான பிறை கொண்ட நகங்கள்.
அனிச்ச மென் திரை கீறல் - அனிச்ச மலரை விட மென்மையாக கன்னத்தில் கீறினாள்.

நெறி- வழி 
வளி- காற்று
விழியின் புனல்- கண்ணீர்
குழலின்- கூந்தல்
வெண் முறுவல்களை வாலெயிறு- வெண் பற்களை கரைத்திடும் உள் இதழ்கள்
முள்ளெயிறு-முள்ளாய் குத்தும் கண்கள் 

நன்றி-நலம்புனைந்துரைத்தல்(திருக்குறள்)