Saturday, 21 February 2026

112.நாளைய பூக்கள்

நீ பார்க்காத விதை -ஓர் பூங்காவனம்
தொட்டிறாத சாறல் -ஓர் பெருமழை 
இரசிக்காத இசை -ஓர் சிம்பொனி
வாசிக்காத வரி - ஓர் காப்பியம்
கேட்காத சொல் - ஓர் புராணம்
சுவைக்காத பதம் - ஓர் விருந்து
நீ இல்லா உலகம் - ஓர் அண்டம்

நினைவிலே முளைத்த தீ
வீழ்ந்ததோ காதலை விரும்பி
என் தவிப்பன்னென்னவோ உனக்கழகா ?

இன்று நீ சூடிய மாலை
நேற்று பூத்த மலர்
உன்னைப் பற்றி அறியாத
முந்தைய விதை.

மண்ணிலும் குற்றமில்லை
மழையிலும் குறைவில்லை
பாதை மாறி வீழ்ந்தனவோ என் விதைகள்.

No comments:

Post a Comment