Saturday 28 July 2018

கார் நிலா

செங்கதிர் சூரியனின்
தோள் சாய்ந்து சிரிக்கும் கார் நிலா
இவள் கரு விழி சிரிக்கும் பொழுதினில்
கொண்டலிற்குள் ஒளிந்திடுமோ விண் நிலா
இத்தனை அழகும் கொண்டவள் இன்னிலா
கருநாடகம் கொண்ட எம் பெண்ணிலா.

எம் தோழி என வந்து
இன்று தாயான பெண்ணவளே
என் குறைகள் இன்னதென
அத்தனை இரைச்சல் உன்னை சுற்றி
எத்தனை அமைதியாய்
கண்கள் ஊடாக
காதலை மட்டும் காண்கிறாய்.

சங்கீதாவின் சாந்தம்
எம்மை மாலையிட்ட
உங்களோடு மட்டுமே என்பாய்
நம்மை பிரித்து வைத்து
இந்த காலமும் ஏக்கமும்
கண்ணாமூச்சி காட்டுவதனோ?

என்னை எளிதாய் காதலிக்க பழக்க
உன்னால் மட்டுமே முடிகிறது
ஆஸ்டின் நகரத்தின் சாலைகள் யாவும்
ஆருயிரே உன்னை நோக்கி செல்கிறதா?
பேரன்பே கடலில் ஒர் தோணி
உன் கரை சேர காத்திருக்கிறது.

காதல் வேட்கை

"என்ன"
"ஒன்றுமில்லை"
"சரி அழைக்கிறேன்"
அளவிலா காதலின் ஆளுமையில்
அன்றைய பொழுதின் ஊடல்.

கண் காணா தொலைவெனில்
கணைகள் வீசி கொள்கிறோம்
சங்கீதா எனும் பொழுதினில்
சினம் எங்கே தொலைகிறது?

செடியாய் பிறந்திருந்தால்
மண்ணில் புதைந்து
மலரென பூத்து
மங்கையை சூடியிருப்பேன்
மனிதாய் பிறந்து
பிரிந்து வாழ்கிறேன்.

பாதம் வலித்திடும் பிணிவிலும்
கோதை காதல் கேக்குதடி.
எத்தனை தலையணை மாற்றுவது
எதுவும் உன் போல் அணைப்பதேயில்லை.

Thursday 26 July 2018

அதிகாலை அழகே

குங்கும சிமிழே
புன்னகை தீற்றலே
அதிகாலை மலர்ந்தால் உன் முகம்.

மொழியற்ற ஊமைக்கு
கவிதையாய் வந்தாய்
நிறமற்ற தூறின் நுனியில்
வண்ணமாய் இருக்கிறாய்
கருப்பு வெள்ளை வாழ்க்கை
உன் காதல் சாறல் கேக்குதடி.

கனவில் தான் காதலியே
முத்தமிட வருவாயா
மூச்சிரைக்க அணைப்பாயா
சொல்லடி என் தேவதையே.

தினம் புதிதாய்
கண்கள் பறிக்க
வார்த்தை துளிர்க்குதடி
ஆனால் நாள் முடிவில்
மெல்லிய முக நெளிவில்
கற்பனை அனைத்தும் கலைத்து செல்கிறாய்.

எதை கொண்டு உன்னை காதலிக்க
வரி எழுதி ரசிப்பேனா
இல்லை
கானம் பாடி கவர்வேனா
சங்கீதாவே என் காதில் கூறடி.

இந்த காதல் தான்
உன்னை அணைக்க தள்ளுதடி
கட்டி கொண்ட கனம்
காலமும் வெட்கத்தில் உறையுதடி.

கனவில் தான் காதலியே
முத்தமிட வருவாயா
மூச்சிரைக்க அணைப்பாயா
சொல்லடி என் தேவதையே.

Sunday 8 July 2018

நானுற்றி பன்னிரண்டு முத்தம்

உறக்கத்தில் எழுந்து என்னிடம்
முத்தம் கேட்கிறாய் தேவதையே
படுக்கையில் உன்னை அணைக்க
அடுத்து நான் இல்லை காதலியே.

துணையில்லாத வறியவன் நான்
முத்தக் கொடை எங்ஙனம் புரிவேன்
எம் கண்ணீர் துளிகள்
உன்னை சீண்டாது
மனக் குடைனுள் மறைத்துக் கொள்கிறேன்.

உனக்காக மட்டும்
சிரிக்க தெரிந்த முகமிது
அதுவும் உன் கருப்பு வெள்ளை
இரட்டை ஜடை புகைப்படம் தருவது.

தீயே உன் தாகம் தீர்க்கா நீரிது
பிரிந்து வாழும் பிழையும் எனது
கார்த்திகை கன்னியே
கட்டிக்கொள் என்னை
கண்கள் மூடி உன்னுள் கலக்கிறேன்.

விரைவில் நம் மணநாள் வரும்
அன்றைய இரவு
நான் ஒன்று பதித்து
நீ ஒன்று பற்றி
இதழ் இரண்டும் பனித்து
மொத்தம் இடலாம்
நானுற்றி பன்னிரண்டு முத்தம்.

Monday 2 July 2018

மருதாணி கை பிடிச்சு

என்னோடு இருக்கற ஒருத்தனுக்கு
ஒரு மாசம் மனைவி இல்லாம
உலகமே ஓய்ஞ்சிருச்சாம்
வெள்ளில பொறந்த என் தங்கம்
எப்போ என்னோட சேரும் தெரியலயே?

என் செவ்வாய் இதழழகிய
திங்கள் தாண்டி தீண்டலையே
கண்ணீரோட சாயம் காஞ்சி
கல்யாண சேலை வாங்கி
கையோடு அணைப்பதப்போ?

மருதாணி கை பிடிச்சு
மோதிரம் தான் இணைச்சு
கடலோட நான் வருவேன்னு
மீனராசிக்காரி கிட்ட சொல்லி வைச்சேன்
என்னும் நான்
மல்லிகை வைச்சிவிடலையே
மணக்க மணக்க
அவ வைச்சு சாப்பிடலையே.

உன் நெத்தி குங்குமத்துல
எத்தன சாமி நேந்திருக்கும்
எனக்காக தல சாய
உன் மெத்த முழிச்சிருக்கும்
என்னோட காத்து வாங்க
அத்தன கடலும் அலைமோதும்
நம்ம கல்யாண நேரந்தான்
கை சேறுர காலம் வருமா?

நித்தம் உசிரு போனாலும்
நினப்பெல்லாம் பெங்களுர்காரி மேலடி
நெஞ்செல்லாம் முள் தைக்குதடி
உன் முத்தம் ஒண்ணு போதுமடி
இந்த உலகத்தோட முகத்துல
என் மனசு ஒண்ணும் இல்லடி
நாளைக்கு நம்ம மவ சொல்லட்டும்
அப்பன் ஆத்தா காதல பத்தி.