Saturday 26 September 2020

SPB (Soulful Play Back Singer)

 உங்கள் பாடல் அனைத்தும்
தமிழ் ஒலியின் உச்சம்
எளிய மனிதரின் 
உள்ளத் திறவுகோல் உங்கள் குரல்
ஏன் ஐயா எங்களை விட்டு சென்றீர்?
பூவுலகு போதுமென
இறைவனே கவர்ந்து சென்றாயா
எங்கள் இசைப் பேழையை

வானொலியில் சிறிகடித்த எங்கள் வானம்பாடியே
இந்நாள் வரையில் உங்கள் பாடல் 
எந்தன் சுமைதாங்கி வந்தது 
உங்கள் மறைவின் சுமையை
எதை கொண்டு தாங்குவதையா?
மூச்சு விடாமல் பாடியவர் நீங்கள்
இன்று மூச்சை நிறுத்தி கலங்க வைக்கிறீர்கள்
மீண்டும் எழுந்து பாடுங்கள் அய்யா

உங்கள் குரல் கொண்ட இசை
இறவா இராகம்
"கண்களில் என் இந்த கண்ணீர்"
பொய்யான வார்த்தைகளால்
ஆற்றிட தோற்கிறேன் என் புன்னகை மன்னனே
ஆசை வந்து எம்மை ஆட்டிவைக்கிறது
இனி "உம்மை நினைத்து" 
யார் இங்கு பாடுவாரோ?

மண்ணில் உதித்த ஒப்பில்லா பாடகனே
உந்தன் இறுதி ஊர்வலத்தில் பூக்களை அல்ல
இராகங்களை தூவ வேண்டும்
எங்கள் இதய கீதத்திற்கு
கோடி இதயம் உங்கள் குரல் கேட்க வேண்டுகிறோம்
விரைவில் தோன்றவா எங்கள் பாடல் அரசனே.

Saturday 23 May 2020

கார்த்திக் டயல் செய்த எண்

ஒரு வேளை கார்த்திக் ஜெஸ்ஸியை கடந்து சென்றிருந்தால், அவன் எண்ணவோட்டம் என்னவாயிருத்திருக்கும் ......

ஜெஸ்ஸி -
நேற்று முடித்த நூல்
புள்ளி வைத்த வாக்கியம்
காதல் வேட்கும் கானல் நீர்
முழித்து வைத்த கனவு
எழுதாமற் வீசிய காகிதம்.

விலகி சென்றாய்
தனிமையில் உழுதேன்
நீ இல்லா பாதையில்
ஓர் அமைதி ஒளிந்திருக்கும்
உன் ஓசை அற்ற மௌனம்
என்னை எழ துரத்தியது
எழுதினேன் இன்னும் எழுதுகிறேன்.....

இதமாய் அவ்வபோது அணைத்த நிழல்
பின் வலியாய் உறங்காமல் துரத்தும்
உன்னிடம் காதல் யாசித்தால்
அதனுள் என் சுயம் இழப்பேன்
எத்தனை நாள் ஏமாற்றி கொள்வது?

நீயும் எந்நேரம் கடந்திருப்பாய்
கடந்து விட்டாய் என்பது
நான் ஏற்க மறுக்கும் உண்மை
நீ -ஓர் நிறைவுறா காதல் கடிதம்
தொலைந்த முகவரியுடன்
தொலயாத வினாக்களை
பெட்டகத்தினுள் வைத்திருக்கிறேன்
உன்னை திருத்தி எழுதும்
எண்ணம் மட்டும் தோன்றவேயில்லை.

Sunday 12 April 2020

விது-2

உன் புன்னகையும்
மழலை சிரிப்பும் போதும்
நாள்தோறும் நீ வளர
நினைவுகள் பின்னோக்கி செல்லும்
அந்த நவம்பர் மாத மாலைக்கு.

அருணை முகமே கடவுள் சிரிப்பே
உன்னோடு பேச பழகையில்
புது மொழிகளும் பிறந்திடுமே
அனுதினமும் நீ பேசும் உந்துதலை
கவிதையாய் வரைய வேண்டும்
கொல்லும் கிருமியின்
தடை இல்லையெனில்
உனை கொஞ்சி சுமந்திருப்பேன் இந்நேரம்
நடை பழகும் வேளையிலே
இத்தடைகளையும் பழகுவாய் நீ
மனோ-பலம் என்றும் உன் துணை நிற்க.

ஓங்கி நிற்கும் தெங்கின் இலை
நாணம் கொண்டு சிற்றில் ஒளியும்
உந்தன் ஈர குளியல்
நீட்ட கூந்தலழகினிலே
கிலுகிலுப்பை மீட்டி வரும் வேணி
பாட்டன் கைகளில் மெந்நடை பயில
எம்மை நோக்கி பூங்கொன்றாய் வா நீ
கூடி நிற்கும் நெஞ்செங்கும்
செல்லம் கொள்ளும் இளமாங்கனி
உள்ளமெங்கும் நீ ஆளுவாய்
எங்கள் இராஜ கனி.

Saturday 11 April 2020

Quarantine கவிதைகள்

ABAP பெண்ணே என்னை கொஞ்சி
மாயம் பண்ண வா வா
7Plus கண்ணே Heart-ஐ கொஞ்சம்
Air drop செய்ய லாமா?
என் Eclipse காதல் வட்டம் போட்டால்
அதில் நீ தான் HANA Studio வா.

Corona Quarantinil
Tableau shut down பண்ணவா?
ஆசை எல்லாம் சேர்த்தே வைத்து
ஓர் மேசை காபி பேசவா
தாகம் தீர்க்க வான் மழையாய் வந்தாய்
CLOUD-ல் உன்னை Upload செய்தவராரோ?

Big Data சேர்க்க முடியாத
அன்பின் சிகரமே
பூக்களின் புன்னகையை பறித்தவள் இவளா
SIRI- யும் கொஞ்சம் குழம்புதே
Loop-ஐ சுற்ற வைக்கும் Hadoop-நீதானா?
உன்னை KNIME செய்வேன் ஆழமா
காற்றாய் பறக்கும் காலம் கூட
காலடியில் வீழுமே
காதலே நீ என் FaceTime ஆனால்.

Friday 14 February 2020

அந்த தீராநதி ஓடந்தனிலே

உன் பாதம் தழுவி
காதல் பற்றி
கொஞ்சியதே என் கண்கள்
காணாமற் நழுவி சென்றாய்
கொலுசே நில்லாயோ.

நித்தம் நிறைய
முத்தம் பதிய
வேண்டிடுமே என் இதழ்கள்.
கரு மை தீட்டி
கனவை தீண்டி
சிலையென நின்றாயே.

இரவு பொழுது
நிலவின் மடியில்
தனியே உனை வேண்ட
உந்தன் நெற்றி பொட்டில்
வீழுந்து விட்டேன்
வருடியதே பொற்கூந்தல்.

தேன் வடிக்கும் நிலவே
எனை தேடி வந்த அழகே
காதல் எறிந்த
குளத்தினுள்ளே, முழ்க வேண்டும் சகியே.

தேன் வடிக்கும் நிலவே
எனை தேடி வந்த அழகே
காதல் எறிந்த
குளத்தினுள்ளே, முழ்க வேண்டும் சகியே.

மார்கழி விடியலோ
மலர்களின் குவியலோ
என் இதயமெங்கும் ஓரசை
உந்தன் இசையோ.

உலகம் சிறியதே
சிறகுகள் விரிந்ததே
கூடி பறக்க உலகம் ஓர்
காலடியில் விழுமே.

என் விடுகதையின் புதிரே
சரிகிறேன் உன் எதிரே
மீட்கவா ஏற்கவா தீபிகா

நதியோர நாணலை
வேய்வெனே கூரையாய்
அதனினுள் உன் நாணமது
அடங்கிதான் விடுமோ?

தேன் வடிக்கும் நிலவே
எனை தேடி வந்த அழகே
காதல் எறிந்த
குளத்தினுள்ளே முழ்க வேண்டும் சகியே.