Sunday 12 April 2020

விது-2

உன் புன்னகையும்
மழலை சிரிப்பும் போதும்
நாள்தோறும் நீ வளர
நினைவுகள் பின்னோக்கி செல்லும்
அந்த நவம்பர் மாத மாலைக்கு.

அருணை முகமே கடவுள் சிரிப்பே
உன்னோடு பேச பழகையில்
புது மொழிகளும் பிறந்திடுமே
அனுதினமும் நீ பேசும் உந்துதலை
கவிதையாய் வரைய வேண்டும்
கொல்லும் கிருமியின்
தடை இல்லையெனில்
உனை கொஞ்சி சுமந்திருப்பேன் இந்நேரம்
நடை பழகும் வேளையிலே
இத்தடைகளையும் பழகுவாய் நீ
மனோ-பலம் என்றும் உன் துணை நிற்க.

ஓங்கி நிற்கும் தெங்கின் இலை
நாணம் கொண்டு சிற்றில் ஒளியும்
உந்தன் ஈர குளியல்
நீட்ட கூந்தலழகினிலே
கிலுகிலுப்பை மீட்டி வரும் வேணி
பாட்டன் கைகளில் மெந்நடை பயில
எம்மை நோக்கி பூங்கொன்றாய் வா நீ
கூடி நிற்கும் நெஞ்செங்கும்
செல்லம் கொள்ளும் இளமாங்கனி
உள்ளமெங்கும் நீ ஆளுவாய்
எங்கள் இராஜ கனி.

No comments:

Post a Comment