Saturday 22 September 2018

பெண் மயில்

அன்று புகைவண்டி நிலையத்தில்
தேடி வந்தது உன்னையல்ல
அக்கணம் புதிதாய் பிறந்த
என்னைக் காண

காதலெனும் உச்சிக்கிளை எட்டாதென
உள்ளம் துறந்த நொடியில்
எங்கிருந்து வந்தாய் தேவதையே
உன் வழித்தடம் எங்கும்
காதலின் ஓசை தானா சங்கீதா?

எத்தனை கர்வம் தான் உன்னுள்ளடி!
என் கவிதைகள்
உன்னை முத்தமிட பொழுதெல்லாம்.

தீண்டி தான் பார்க்கிறாய் என்னை
பிடிவாதம் கொண்டு கண்ணாம்பூச்சி ஆடினால்
கார்த்திகை மழையில் கலாபம் ஒளிந்திடுமா?

தலை குளித்து
உந்தன் கூந்தல் விரிக்கையில்
எத்தனை ஆண் மயில் கவிழ்ந்ததடி!
பெண் மயிலே என்னை கவர்ந்தாய்
மனம் சிக்குண்டு கிடக்குதடி.
ஆண்மையின் வசியம் பெண்ணுள் முடிவது
ஆயுள் முழுதும்
உன்னோடு ஓர் கூட்டினில் வசித்தால் போதும்.

Friday 21 September 2018

காற்றின் மொழி திரைப்படப் பாடல் போட்டி

சூழல்- இத்தனை நாட்கள் குடும்பத்திற்காக வாழ்ந்த மனைவி தனக்கென வாழத் தொடங்குகிறாள். அவளுடைய வெற்றியில் மகிழ்ந்தாலும், அவளுடைய இன்மையை உணர்ந்து கணவனின் மனதில் எழும் உணர்வுகளே இந்தப் பாடல்.
கனவுகளை தேடிப்பறக்கும் மனைவிக்கு வாழ்த்தாகவும், தன்னுள் எழும் வெறுமையையும் இந்த பாடல் பதிவு செய்ய வேண்டும்.


காதல் மடியே....
விடியற் காலம் உன்னை அழைக்கிறதே
விழியோரக் கண்ணீர்த்துளியே
உன் சிறகுகள் விரித்துக் கொள் அன்பே.

தீண்டிய விரல்கள் தனியே ஏங்கி
மீண்டும்  தழுவிட காத்திருக்கும்
பிரிந்து வாழ்வோம் வேலை நேரம்
இரவு வந்து காதல்  வேட்கும்

காலதர் வழியே காற்றை நிறுத்திக்கேள்
தனிமையான பேருந்து நிறுத்தங்கள்
நாம் கழித்த கதைகள் பேசியிருக்கும்.

உறவொன்று வந்திட ஏங்காதே
கரம் கொண்ட கணம்-
பாரங்கள் என்னோடு கலங்காதே
எனக்கென கரு சுமந்தாய்
இன்று கூட்டினை
நான் ஏந்திக்கொள்கிறேன்

சமையலறை வெப்பம்
இனி என் வியர்வை சுவைக்கட்டும்
கொடியில் உலரும் உடைகள்
உன் வாசம் வீசட்டும்
பாதி மடித்த "அலை ஓசை"
உனது அழைப்பு மணிவரை ஒலிக்கட்டும்

வாசல் வரும் வசந்தம்தனை
வரவேற்று செல்லடி என் கண்மணி
வேர்க்கை துளியினுள் வேட்கைக் கொண்டு
வேள்வியில் "ஜோதிக் கா"ணும் வேளையடிக் கிளியே
சூரிய ஒளியென
துணையாக நானிருப்பேன்
வாகை சூடிவா என் மலர்க்கொடியே.



Sunday 16 September 2018

இதயக்குறிப்பு

தினமும் கனவுல
எங்கயோ முட்டுது மூச்சு
சிருள் முடிக்காரிக் காதல்ல
நல்லா தான் சிக்கிகிச்சு மனசு
பேசாம ஒரு நாள் தூங்கிட்டேன்
விடியுற முன்னாடி அலறிச்சு
- என் வாட்ஸாப்பு

பெங்களூர் பொண்ணு
மயக்குறா நின்னு
பெரும் காதல் வீசுதுப் பாரு கண்ணு
இந்த மறதிக்காரனுக்கு மடியொன்னு
அந்த சங்கீதா மனசுல "வைத்தி"ருக்கும்
எந்த கடையில தான் விக்கும்
சட்டை நூலா அவ நினைப்பு!

கடிகார முள்ளப் போல
வெளந்தி புள்ள அவள சுத்தி வரேன்
சண்டிக்காரி சாவிக்கொத்தா
கோயம்பேடுல என்னை இணைச்சா
கூடயே வருவேன்னு சொல்லிவிட்டா
பரிசம் போட்டிருப்பேன் நெஞ்சுல!

தெரிஞ்சு தான் விட்டுடு வந்தேன்
என் டெட்டி பொம்மைய
இங்க எவளும் இல்ல
அவளப் போல என்ன கொஞ்ச
தீபக்குளம் நெறஞ்சிருக்கு நீரோட
தீபிகா எப்போ நீ வருவ விளையாட?