Thursday 3 January 2019

காதல் தடம்

நிற்க வைத்து தான் சென்றேன்
என் அழகிய சிலையே
உன்னை இமை கொட்டாது
செம்புல மேனி ரசிக்காது
பேருத்தில் நீ செல்கையில்
தடம் பிழர்ந்து
காதலாகி நிற்றேன் நான்

மேடைகள் ஏதும் விரும்பாது
திருப்பி அனுப்பிய கவிதை இது
நீ மட்டும் எதற்கு ஏற்க வேண்டுமென
தனியே நின்றேன்
இன்று கூட
நான் செல்ல விரும்பும் நெடுந்தூரம்
உன் மடியாய் இருக்காதாயென
பனியில் வேண்டுகிறேன்
ஆனால் எப்பொழுதும் போல்
உன் கண்ணாம்பூச்சியில்
தோற்றேப் போகிறேன்.

கடல் மீது பனிப்பொழிந்தால்
காண்போர் எவரும் உண்டோ கண்மணி?
நீ இன்றி ஏதும் வருகையில்
அதை இன்பமாய் ஏற்குமோ என் மனம்?
விலகி நின்று
புகைப்படமாய் சிரிக்கும் உலகம்
என் கண்ணீர் துடைக்க கைகள் தருமா?

என்னை தவிர்க்கும் உலகம்
தனித்தனியே வெறுத்து
சேர்ந்தே சிரிக்கிறது
அவர்களிடத்து வஞ்சம் தனை
என்னிடத்தில் அண்டாது
உன்னை கேட்கிறேன்.

நான் கேட்கும் பதில்தனை
மேள ஓசையோடு சத்தமாய் சொல்வாயா?
அழுகுரலுக்கும் தனிமைக்கும்
அமைதி தோன்றினால்
பெண்ணே அது
உன் காதலாகி அணைக்குமோ?

மணநாள் சூடம்
வேளையொன்று சொல்லடி
உன்னை மெய் மறந்து சூடிகொள்வேன்
காத்திருந்த வேளையனைத்தும்
காதலாகி பெருகி வரும் கண்மணி.