Thursday 21 June 2018

என்னருகே வா காதலி

வில்லாய் வரைந்த புருவம்
இடையில் ஓர் சந்தன கீற்று
இந்த அழகு அவளிற்கு
இன்னும் வர்ணனை எதற்கு?

ஐம்மொழி செல்வியின்
கண்களில் விழுந்திட
தவம் புரிந்தேன்
கண் ஏட்டு புற்களுக்கு
நித்தம் நீர் இறைப்பவள்
விழியசைக்க அழுத்தமா?

துகளான விண்வெளியில்
என் இகலாய் ,தனியுலகமாய்
நீ இருந்தால் போதும்.

நீர் அளந்து வான் பறந்து
காற்றோடு கலந்து
உலகின் சொற்கள் மறக்கட்டும்
மார்ப்போடு அணைத்து
நாம் பேசினால் போதும்.

சினம் சீண்டல் நகை அழுகை
எத்தனை வேண்டும் பேச
காதோரம் என்னை வழியனுப்ப
ஒற்றை வார்த்தை இருக்குதடி உனக்கு.

காடுகள் சுற்றிவிட்டு
காதலி பேசும் நொடியில் வருகிறேன்
எத்தனை காலம் வேண்டும் சொல்லிவிடு
நான்  உறங்க போவதற்கு முன்.










Monday 18 June 2018

ஒளி

ஒளி கொஞ்சம் கூராய் கிழித்து
எம் சிரத்தை பழித்து
வலியில் வீழ்த்தி செல்கிறதாம்
மருத்துவர் சொல்கிறார்
என்னை கொல்லும் வலியின் காரணி
ஒளி தானென ஒப்புக்கொள்கிறேன்.

அது தினமும் என் கண் முன்
காதல் வைத்து
வார்த்தை வாள் வீசி
எங்கோ ஓரிடத்தில்
கண் சிமிட்டும் நிலா!

ஒரு வேளை
அவள் பெயரே ஒளி என்பதால்
"ஒளி"ந்து கொண்டே
அகக் காதல் மொழியில் முத்தத்தூது
முகங் காட்டா வழி சங்கீதாஸ்வரம்
அவளிற்கு பிடித்தமானது போலும்

குளிகை தனை தேடி
அவை தீர்ந்து விட்டதென்கிறாள்
ஆம் காணவில்லை
கடவுள் வடித்து வைத்த வளைவொன்று
அடுத்த முறை
நான் வந்து வரைய வேண்டும்
அவள் கன்னத்தில்.

நித்திரை தொலைத்தவனுக்கு
மாத்திரை வலி போக்குமா?
உன் திரை என்னை வதைக்கிறது.
நீ பேச அழைத்தால்
விண்மீன்களும் வந்திறங்கும் இங்கு
நான் பேச அழைத்தால்
தோட்டத்து ரோஜா சொல்கிறது "நத்திங்"
வானின் கீழ் அனைத்தும் உனது
என்னையும் சேர்த்து .
மீண்டும் சேரும் வாழ்க்கை அருகில்
அந்நாள் வரை
அந்தி பொழுதில் அல்லனாய்
தொல்லையாய் அழைப்பேன்
(மனம்) நிறைய பேசடி மனைவி.

உங்களை பிரிந்து புண்ணான நெஞ்சம்
புன்னகைக்க தெரியவில்லை என்பாள்
என் பால் கொண்ட
காதலிற்காக கேட்கிறேன்
கொஞ்சம் சிரி :)

தீ பக்கத்தில் வா
தீபிகாவாய் முத்தமிடு காதலி.