Thursday 29 November 2012

எவனோ ஒருவன் பாடல்-explained


Preface: How the Evano oruvan song from the movie Alaipayuthey is abstracted with colors Red and Blue inorder to deal with human raw emotions.
 A post analyzing the technical brillance of Mani sir and P.C.Sreeram.

Coincidenceஇந்த வார்த்தைக்குள்ள தான் எவ்ளோ அற்புதம் Eyes wide shut பத்தி நாலு நாளா படிச்சுக்கிட்டு இருக்கும் போது நிறங்களோட மகத்துவம் தெரிஞ்சுது (credits below) .அப்போ கெளதம்மேனனோட இந்த இன்டர்வியூ கண்ணுல பட்டுச்சு(link @ end of blog)
எவனோ ஒருவன் பாட்ட பத்தி அப்படி சொல்லி இருந்தாரு. அப்படி அந்த பாட்டுல என்ன தான் இருக்குனு பார்த்தப்பதான் புரிஞ்சிது மணிசாரும் பி.சி.ஸ்ரீராமும் நிறத்த வச்சி உணர்வுகளை சொல்லி இருக்காங்கனு.
அந்த பாட்டோட இனம்புரியாத சோகத்துக்கு காரணம் அதுல உபயோகிச்ச லைட்டிங், அருமையான நிறக்கலவை . இந்த பாட்டுல ஒவ்வொன்னும் பார்த்து பார்த்து பண்ணது.

வாங்க கொஞ்சம் விரிவா பார்க்கலாம்.

அலைபாயுதே இந்த படமே வண்ணமயமான படம் .பி.சி.ஸ்ரீராம் காமிரால வண்ணத்த குழைத்து எடுத்தமாறியிருக்கும் .
படத்தின் மொத்த கதையையும் ஒரே பாடலில் சொல்லுவதுபோல இந்த பாடல் அமைந்திருக்கும்.(படம் முழுதும் இந்த பாடல்ல வர மாறி ஷாலினிய தேடிகிட்டு இருப்பாரு)
இந்த பாட்டு முழுதும் சிகப்பும் நீலமும் கலந்து இருக்கும்(பாடலின் பின்புலம் கவனிக்க) காரணம் நீல நிறம் வந்து உற்வின் பிரிதலை, ஞாபகத்த காட்டும்.
சிகப்பு நிறம் இதம், சுகம்,சேர்தலைகுறிக்கும் இதுல வர்ற நிறங்கள் எல்லாம் ரா எமோஷன்ஸ குறிக்குது.
அதேபோல இந்த நீல- சிகப்பு நிறங்களை வைத்து இருவரின் நேர்-எதிர்குணங்களை பரதிபலித்துருப்பார்(நீல- சிகப்பு இரண்டும் இரு துருவங்கள்).
பாட்டோட முதல் காட்சி, மணிசாரோட cliché கடல் + மெதுவா ஆரம்பிக்கிற மழை ஷாலினியோட அறிமுகம்(கவனிக்கஇதுல சிகப்பு சுடிதார் போட்ருப்பாங்க)


 
அடுத்த பிரேம்ல மாதவன் பஸ்ல வருவாரு அவுட் ஆப் போக்கஸ்ல வர இந்த காட்சில சிகப்பு நிற துணி தெரியுது (ஷாலினி சுடிதாரும் அதே நிறம்). இதுல பஸ்சோட நிறம் கூட லைட்ரெட்ல இருக்கும்அவங்க இடத்த வந்து சேர்ந்துடாங்கனு குறிக்க பாடல் பூரா ஷாலினி பிரிந்து இருக்கிறதால மாதவனோட உடை, குடை, பை எல்லாமே நீல நிறம்ல ப்ரொஜக்டாகி இருக்கும்.  




அதே மாறி ஷாலினிய தேடி போறப்ப எல்லாம் பஸ் நிறம் நீலமா இருக்கும். பிறகு ஷாலினி மாதவன மிஸ் பண்ணும் இடத்துலையும் நீல நிறம் இருக்கும் .ஓரு பிரிவோட சோகத்த குறிக்க நீலம் ஒரு சிறந்த நிறம்.

இப்போ தான் முதல் தடவை ஷாலினி மாதவன பத்தி பீல் பண்ண ஆரம்பிக்கிரங்க அதனை மெதுவா குறிக்க மெல்லிய நீல உடையுடன் காண்பிக்கப்படுகிறார்.



அடுத்து பாலத்துல போக்கஸ்ல வச்சி அவுட் ஆப் போக்கஸ்ல மாதவன் அதாவது ஷாலினி மாதவன பார்காம போனத நம்ம உணருற மாறி மாதவன் மறைத்து காட்டபட்ட இடம்.



பிறகு படகுல போகும்பொது மெதுவா ஷாலினி கூட நினைவின் துளியாய் நீல நிறம் கலந்து காட்டப்படுது (ஒரு நொடிக்கும் குறைவாக வரும் காட்சி இது).




திரும்பவும் மாதவன் ஷாலினி எமோஷனல் காட்சிகள் இந்த தடவ மாதவன் விடும் புகை கூட நீலமா தெரியுது இப்போ ஷாலினியும் நினைக்கிறதால அவங்களுக்கும் நீல உடை. (நீலம்-பிரிவு)

நிற்க: இங்க ஷாலினி நிற்கும் கான்வாஸோட உடை மஞ்கள் ஆனால் வேண்டும் என்றே சிகப்பாக காட்டப்பட்டுள்ளது.
பி.சி.ஸ்ரீராமின் இன்னும் ஒரு கைவண்ணம்.



இப்போ ஷாலினி மாதவன தேடி போக ஆசைப்படுறாங்க அதனால பாடலின் ஆரம்பத்தில இருந்த மாறி சிகப்பு நிறத்த போக்கஸ் பண்ணி பின்னாடி ஷாலினி நிக்குறாங்கபின் ஷாலினி தனக்கு தானே சமாதானம் படுத்திக்கும் போது நீலம் சிகப்பு போர்வைக்குள் மறைக்கப்படுகிறது.



பாட்டோட முடிவுல ரெண்டு பேரும் சேர்றாங்க ,இப்போ சுத்தி இருக்கிற எல்லாமே சிகப்பு நீலமா இருக்கு(எல்லார் உடைகளையும் கவனிக்க).
முதல்ல போக்கஸ்ல இருந்த பாலம் இப்போ அவுட் ஆப் போக்கஸ்ல இருக்கும் ரெண்டு பேரும் போக்கஸ்ல இருப்பாங்க.




இதன் தொடச்சியாய் ஷாலினி-மாதவன் திருமணத்தின் போதும் இந்த நீல- சிகப்பு சேர்தல் இருக்கும்.


ஓரு காதலியோட பிரிவ ,காதலின் வலிய இத விட அழகா சொல்ல முடியுமானு தெரியல ஆனா நிறங்கள்மூலமா வலிய கொண்டு வந்தது தான் இந்த பாட்டுடோட அழகுனு நினக்கிறேன்.

இதே மாறி நிறங்களை வைத்து அமைந்த மற்றுமொரு பாடல் உயிரே உயிரே பம்பாய் படத்தில் இருந்து.

கிரெடிட்ஸ்:
Eyes wide shut review : http://popcornreel.com/htm/eyesinterp.htm
Gautam menoninterview :http://cinema.vikatan.com/articles/news/9/194
My dear friends vaithy and arun 


Thursday 20 September 2012

காதல் பதிவுகள்-5

பெரிய தியாகங்களில் மட்டுமல்ல சின்ன அக்கறையிலும் வாழ்வது காதல் என்றுணரும் காதலன் ஒருவனின் வரிகள்       


அருகே அவள் முகம் பார்க்கையில்
      ஆண்டுகள் பல சிறகடித்திருந்தன
பிறப்பேனும் ஒன்று மறுமுறை இருந்தால்
      அதில் ஓர் இரவு தான் வாழ்வென்றால்

ராத்திரி நிலவொளியை ரசிக்க வேண்டும்
      அவள் புன்னகையில்
மிதக்கும் மேகம் மறைக்காத ஒளியினை போல்
     ஆழ்கடல் எண்ணங்களில் அழியாசுடர்கிறாள்

Wednesday 4 January 2012

காதல் பதிவுகள்-4

ஆன்சைட்டு மாப்பிள்ளை என
ஆசையாய் கட்டி வைத்தீர்கள்
ஆனால்
அவர் இதமாய் இரவு அணைத்துக்கொள்வது
ஆறுபதாயிரம் ருபாய் மடிக்கணிணியை

ஆடம்பரமாய் இருக்கிறேன்
என ஊரார் பேசினாலும்
உள்ளுக்குள் புழுங்கி கொண்டுருக்கிறேன்
அணையா நெருப்பாய்

கழுத்துக்கு தங்க மாலைகள்
போட்டு அனுப்பி வைத்தீர்கள்
ஆனால்
அவர் இன்று வரை பாசமாய் சூட்டியதில்லை
என் தலையில் மல்லிகை

காதலால் உருகியவனுக்கு மாத சம்பளம்
ஆராயிரம் என்றாலும்
நிறைவாய் மகிழ்த்திருப்பேன்
அவனுடன் என் வாழ்வை

நானும் ஒரு சுயநலவாதி ஆகியிருக்கலாம்
என்ன செய்வது
இரண்டாவதாய் இருக்கும் ராஜியின் திருமணம்
புதைத்தது என் காதலை

எல்லவற்றையும் உங்களிடம்
சொல்லி அழுதிருக்கலாம்
தங்களின் இரத்த கொதிப்போ என்னை கிழிக்க செய்துவிட்டது
இந்த கடிதத்தை

Tuesday 3 January 2012

காதல் பதிவுகள்-3

*
சொல்ல மறந்த என் காதல்
நினைவுகளாக மீண்டும் வந்தது
"உன் திருமண அழைப்பிதழாக"

*
சேர்ந்த காதல்கள் திருமணத்தில்,
சேராத காதல்கள் காதலனின் டைரியில்

*
ஸ்ட்ரா பெர்ரி வாங்கி சென்ற
என் காதல்
பிளாக் பெர்ரி வாங்கி தந்தவனிடம்
விலை பேசப்பட்டது