Thursday 1 September 2016

The Enchanting Nights-மனதை மயக்கும் இரவுகள்

 Hi,

நண்பர் Bharat kumar எழுதிய "The Enchanting Nights" காதல் நாவலை படித்துக்கொண்டிருத்தேன். அவருடன் உரையாடும் பொழுது தான் அந்த நாவலை  திரைக்கதை வடிவில் எழுதியிருப்பதாக கூறினார்.

அத்திரைக்கதையின் நிகழ்வுகளை  ஓர் பாடலாக எழுதினால் எப்படியிருக்கும் என்கிற சிந்தனையில் விளைந்த வரிகள் இவை.

திரைக்கதைக்கு பாடல் எழுதும் முதல் முயற்சி இது , படித்து விட்டு கருத்துக்களை கூறவும்

Book link:(TheEnchantingNights)


வெள்ளி மறைந்து விண்மீன் காக்கும்
                                      மாலை நேரத்து நிறமாலை அவள்
தன்னை மறைத்தவளிடம்
                                     தன்னிலை மறந்தேன் நான்.

புற்களில் கண்டேன்
                                  அவள் ஆரம்
புரிந்து கொண்டேன்
               காதலின் முதல் அகரம்.

அவள் எழிலில் எழுந்து அயர்ந்தது
                                 புகைபடத்தின் ஒளி வெள்ளம்
தாரகை வடிவை கவியுரைக்க
                                 தூரிகை கரங்கள் வார்த்தை தேடின.

நெருங்கிய இரவுகளின் ஊசிமுனையில்
                               ஊன்றினேன் காதலின் விதையை.

உடற் பிணியின் காதல் பசியிற்கு
                               ஊண் அறியா காதலி.
குழம்பிய மனவெளியில்
                              கமர்ந்தாள் காதலின் இடைவெளி

காத தூரம் நிலையிருப்பினும்
                             அட்டிகை எழுப்பியது நங்கையின் ஓதம்.
கற் பூங்காவில் மன சிற்பம் வடித்தேன்
                                              காதலி கரம் கொண்டு

இரவின் பின்னணியில் இருமனம் சேர
                            இருளில் ஓளிர்ந்தது காதலின் கமலம்.


நிறமாலை-rainbow
ஆரம்/அட்டிகை -necklace
கமர் - பிளவு/ create a ridge
தாரகை/நங்கை - girl
ஓதம்- background noise
பிணி-disorder
ஊண்-food
கமலம்-lotus

No comments:

Post a Comment