Wednesday 7 September 2016

ஒரு மணி துளி

நீ அமர்ந்த இடம் வெறுமையென
                  பின்னால் நிறைக்கும் மேக வர்ணம்
மண்ணில் எழும் வாசம்
                 காற்று தூண்டிலிட்ட அவள் சுவாசம்.

பிரியும் பொழுதினில்
                 என்ன சொல்வதென தெரியவில்லை உனக்கு
இமைகள் சுடும் கண்ணீற்கு
                 நில் என்று பாலமிடு போதும்.

எம் வார்த்தைகளுக்கு
                   வாடகை தாய் யாரென தேடுகிறார்கள்
வலி மிகும் இடங்கள் எழுதபடுவது
                  பாடல்களுக்கு மட்டுமல்ல பாவலனுக்கும் சேர்த்தே
அவர்கள் அறியாதது 
                 எம் வரிகள் அடையும் முகவரி நீயென.

மனதின் மேடையில்
               ஏனிந்த கரு நாடகம் பெண்ணே
மேடிட்ட பெண்ணருவி நீ
              என் குருதி பள்ளத்தாக்கினில் பாய்வது எப்போது
மண்ணில் காயும் முன்
              எனக்கென காத்திருக்கிறதா அந்த ஒரு மணி துளி.

No comments:

Post a Comment