Thursday 29 September 2016

பிரியாவிடை(Farewell)

இருளின் முகம் பூசிய மாலை இரவில்
                                        என் தாரகை வழியனுப்பி வீடு சேர்ந்தேன்
இரவல் ஒளியில் மலரும் மல்லிகையென
                                        உன் நினைவுகளில் கவி எழுதிக்கொண்டிருந்தேன்.

உன் விழி தூறல் எதிர்பார்க்கும்
                                             பாலை நிலம் நான்
மலரும் பூக்கள் கேட்க துடிக்கும்
                                             பொன்வண்டின் ஓசை நீ

என்  மதி நீ மறைந்த உடன்
                                      மறைதிங்கள் வானம் ஆனது எம் மனது
உன்னுடன் கழித்த நொடிகளில் தொலைந்த
                                      தனிமையின் ஏழ்மை எம்மை தழுவிக்கொண்டது.

எம் கோயில் தீபம் மாறியதை அறியாது காத்திருக்கும்
                                      திரியின் மொட்டுகளுக்கு என்ன பதிலுரைப்பேன்?
நூலகத்தில் தொலைந்த கவிதைகளானேன்
                                     என்னை தேடி பொருளுரைக்கும் தோழி எங்கே?
வடிக்கின்ற வரிகள் மொழியில் தீர்ந்துவிடும்
                                     சொல்லாத வலிகளின் மௌனத்தை எங்கே தீர்ப்பது?

இதழ்கள் எத்தனை அழகாயினும்
                                      முட்கள் மேலாக மலர்வதில்லை பூக்கள்
வரிகள் எத்தனை வரைகினும்
                                     உன் கரையின் மேலாக ஒலிப்பதில்லை எம் கவிகள்
புறக்கணிதவர்களை புரிந்துகொள்ள சொல்கிறாய்
                                     எங்கே வாங்குவது புன்னகை பூத்த போலி முகங்கள்.

மௌனத்தில் அறையபெற்ற ஊமை விழிகளுக்கு
                                            விடைபெறும் வார்த்தை மொழிகள் வரவில்லை
மனதின் தொடு திரையில்
                                        கழிந்த நிழற்படங்களை ஓட்டிகொண்டிருக்கிறேன்
அங்கே வழிந்தோடும் கண்ணீற்கு
                                       கண்களின் பாதை அறியவில்லை              
நெடுத் தூரமாயினும் வார்த்தை தூது அனுப்பு
                                   கொஞ்ச நேரமாயினும் மலரட்டும் எம் ஆம்பல் மனது.



இரவல்- borrow
பாலை-desert
மறைதிங்கள்-New moon day
மொட்டு-blossom
தூது-message
ஆம்பல் -lilly




No comments:

Post a Comment