Tuesday 13 September 2016

காவேரி

குடகின் தலைமகள்
                              தென்னகம் வாழ மறுவீடு வந்தாள்
சோழர்களின் வீரம் செருக்கு
                              உனக்கு பூச்சூடி மகிழ்ந்தது ஆடிப்பெருக்கு
உன்னிடம் பிறந்தவள் ஆண்பொருனை
                               கரிகாலன் உனக்களித்த சீர் கல்லணை

இயற்கை அன்னை துகலுரித்து
                               மணல் அள்ளி கொண்டோம்
அதனால் கோபித்து கொண்டு
                              பிறந்த வீட்டில் தங்கினாய் நீ

இரு கரை மத்தியில்
                              ஒரு தலை காதலி காவேரி
இரு வீட்டின் நீர் வேறுபாட்டிற்கு
                          கல் வீசி பார்க்கிறது கலவரம்
கோபங்களின் கனல் வேட்கையில்
                தீயென பிகாவின் பூங்காமனங்கள் எரிக்கிறது

பன்மொழி பருகியும்
                             வேற்றுமை வண்ணம் தெரியாதவள் நீ
விளக்குடன் இயந்த தீபம் போல்
                             பிறந்த வீட்டை ஏங்குவது பெண்ணின் மனம்
பிரித்து வைக்கும் எண்ணமில்லை எமக்கு
                             புரிந்து கொள்வோம் பகிர்ந்துணர்வோடு
             

*பிகா  என்பது வட இந்தியாவில் நிலத்தை குறிக்கும் ஒரு சொல்லாகும்.

No comments:

Post a Comment