Monday 10 October 2016

அவள் பெயர் மாயா




சலனமற்று கடக்கும் மேகத்தின் கீழே
  மௌனமாய் தவமிருக்கும் கல் படுகையில்                             
பனியின் நீர்திரை சூழ
    கொஞ்சம் இருக்கமாய் அணைக்கிறது காதல்
மங்கை அவள் ஸப்ரிச நுண்ணலையில்
    கள்ளுண்ட தும்பி என னது மனது.

கருவண்ண சிகரங்களை குறிக்கோளியிட்டு
   காதில் மெதுவாய் கிசு கிசுத்து                                                     
மதியுற் வெண் பிறை உகிரியினை கோர்த்து
    அனிச்ச மென் திரை கீறல் தீற்றினாள்.

ஜன்னலோரம்  மழை துளியென
     மெலிதாய் கழியும் நொடிகளில்
இரு கைகளின் ஓர் இழையில்
     விண்மீன் எண்ணி விரல்களை களைத்தோம்.

வளியின் நெறி மறித்து
   விழியினில் புனல் சேர
குழலின் இடர்வனத்தில் கன்னம் தோய்த்து
  கன்னியின் செவ்விதழிலில் முத்தம் மொழிந்தேன்
வெண் முறுவல்களை வாலெயிறு கரைத்திடும்
பொழுதினிலே-
  இமைகளுக்குள் மறைந்திட்டன முள்ளெயிறு.


மேனியை கிழித்தெழும் செங்குருதியென
 தென்றலிற்கு வழி வைத்து விலகின இதழ்கள்
இன்னும் ஒருமுறை இறுக்கம் தரித்து கொள்ள
  இரவின் மென் போர்வையில் மறைந்துகொண்டோம்
கூடல் முடியும் முன்பே
  கனவோடு கலந்திட்ட என்னவளின் பெயர் -மாயா.


Meanings:
மதியுற் வெண் பிறை உகிர்- நிலவை விட வெண்மையான பிறை கொண்ட நகங்கள்.
அனிச்ச மென் திரை கீறல் - அனிச்ச மலரை விட மென்மையாக கன்னத்தில் கீறினாள்.

நெறி- வழி 
வளி- காற்று
விழியின் புனல்- கண்ணீர்
குழலின்- கூந்தல்
வெண் முறுவல்களை வாலெயிறு- வெண் பற்களை கரைத்திடும் உள் இதழ்கள்
முள்ளெயிறு-முள்ளாய் குத்தும் கண்கள் 

நன்றி-நலம்புனைந்துரைத்தல்(திருக்குறள்)

No comments:

Post a Comment