Sunday 7 October 2018

96

96 திரைப்படத்தின்  சில அசைவுகள்

ராம் அப்படி தான் இருந்திருப்பான்
கோபித்து சென்றாலும்
அவள் வரும் வரை காத்திருப்பான்
அவர்கள் விட்டு சென்ற நொடியில்
இன்னமும் நிற்கிறான்
நிடுவில் ஏதும் மாறவில்லை.

ஆசையாய் காதலித்தவளிடம்
ஏதும் கேட்க மாட்டான்
பார்க்கவும் தயங்குவான்.
இரவு முழுதும் தூங்காது
அவளுடனே சுற்றியிருப்பான்.
ஏக்கத்தோடு இவன் சுற்ற
அவள் மௌனமாய்
"யமுனை ஆற்றினில்" இரசித்திருப்பாள்.

எத்தனை ஆசையாய் இருந்தாலும்
அந்த சின்னஞ்சிறு விரல்களை
பற்றியிருக்க மாட்டான்.
அவள் இருக்கும் இடம்
எங்கிருந்தாலும் வந்திருப்பான்
அப்பொழுதும் பேசியிக்க மாட்டான்
இதயம் எத்தனை கதறினாலும்
சொல்லாமல் விலகியிருப்பான்.

அவள் மட்டும் அறிந்த ஒரு முகம்
இவனுள் இருக்கும்.
அவள் தொலைத்த ஒன்றை
இவன் பத்திரப்படுத்திருப்பான்.
அவள் இடம் மாறி செல்லகையில் கூட
இவன் பேசயிருக்க மாட்டான்.
வழியனைப்பும் முனையும் வரை
வாகனங்கள் எல்லாம் ஒதுக்கி வைத்து
அருகாமையில் அமர
மின்சார ரயிலை வேண்டிருப்பான்.
அவள் வலகி செல்லும் நிமிடம் வரை
இவன் உடனிருப்பான்.
அவள் அந்த நொடி நீள
இறுதி கணத்தில் யோசனைகள் பூக்கும்.
அப்பொழுதும்
அவள் அறியாது செறிக்கும்
காதலையும் கண்ணீர் துளிகளையும்
கேட்டிட வேண்டுமென
மௌனமாய் துடித்திருப்பான்.

அவள் கேட்டிருந்தால்
அங்கேயே கொட்டி தீர்த்திருப்பான்
ஆனால் அவள்
கேட்காமலே சென்றிருப்பாள்.
இறுதி வரை
இவன் வலிகள் சொல்லிட மாட்டான்.
எண்ணங்கள் அவனுள் ஆழுத்த
அவள் விட்டு சென்ற தடத்தில்
அமர்ந்து அழுதிருப்பான்
ஒரு வேளை பேசியிருக்காலம் என.
தனக்கும் சில கரையான்களுக்கும்
"பழைய வாசனை" என
சில நினைவுகளை பூட்டிவைத்திருப்பான்.




No comments:

Post a Comment