Friday 21 September 2018

காற்றின் மொழி திரைப்படப் பாடல் போட்டி

சூழல்- இத்தனை நாட்கள் குடும்பத்திற்காக வாழ்ந்த மனைவி தனக்கென வாழத் தொடங்குகிறாள். அவளுடைய வெற்றியில் மகிழ்ந்தாலும், அவளுடைய இன்மையை உணர்ந்து கணவனின் மனதில் எழும் உணர்வுகளே இந்தப் பாடல்.
கனவுகளை தேடிப்பறக்கும் மனைவிக்கு வாழ்த்தாகவும், தன்னுள் எழும் வெறுமையையும் இந்த பாடல் பதிவு செய்ய வேண்டும்.


காதல் மடியே....
விடியற் காலம் உன்னை அழைக்கிறதே
விழியோரக் கண்ணீர்த்துளியே
உன் சிறகுகள் விரித்துக் கொள் அன்பே.

தீண்டிய விரல்கள் தனியே ஏங்கி
மீண்டும்  தழுவிட காத்திருக்கும்
பிரிந்து வாழ்வோம் வேலை நேரம்
இரவு வந்து காதல்  வேட்கும்

காலதர் வழியே காற்றை நிறுத்திக்கேள்
தனிமையான பேருந்து நிறுத்தங்கள்
நாம் கழித்த கதைகள் பேசியிருக்கும்.

உறவொன்று வந்திட ஏங்காதே
கரம் கொண்ட கணம்-
பாரங்கள் என்னோடு கலங்காதே
எனக்கென கரு சுமந்தாய்
இன்று கூட்டினை
நான் ஏந்திக்கொள்கிறேன்

சமையலறை வெப்பம்
இனி என் வியர்வை சுவைக்கட்டும்
கொடியில் உலரும் உடைகள்
உன் வாசம் வீசட்டும்
பாதி மடித்த "அலை ஓசை"
உனது அழைப்பு மணிவரை ஒலிக்கட்டும்

வாசல் வரும் வசந்தம்தனை
வரவேற்று செல்லடி என் கண்மணி
வேர்க்கை துளியினுள் வேட்கைக் கொண்டு
வேள்வியில் "ஜோதிக் கா"ணும் வேளையடிக் கிளியே
சூரிய ஒளியென
துணையாக நானிருப்பேன்
வாகை சூடிவா என் மலர்க்கொடியே.



No comments:

Post a Comment