Wednesday 21 August 2013

காத்திருக்கிறேன்

காலம்:
 காதலனுக்கும் காதலிக்கும் இடையே ஏன் காதலுக்கும் இடையே Facebook,Twitter,Skype
நுழைந்திறாத காலமது.
உணர்ச்சிகளை கடத்துவதற்கு உள்நாட்டு அஞ்சல் மட்டுமே இருந்த பொற்காலமது
முன்னுரை:
தேவதைகள் குடியிருக்கும் காதலர்களுக்கு தெரியும்
காத்திருத்தல் சுமை சார்ந்ததல்ல என்று.
       
*இதோ இன்னும் ஓர் நள்ளிரவு
 கைப்பிடித்து அழைக்கும் குழந்தையாய்- உன் நினைவு  

* மருதாணி கை தனை
 குவிந்து நீ மறைக்கையில்
 கண்ணாடிக்கு வெட்கம் தொற்றியது-ஏனடி

*பிரிவெண்பது துயரென
 நம்பியிருந்தேன்-நின்
 இதழ் பிரிந்து புன்னகைக்கும் வரையிலடி                                 

*முன்னே என்னை நண்பனுடன் போக விட்டு                                         
 பின்னே வந்து  தலையெட்டி பார்க்கும் தயக்கம் -
 என்னே ஓர் நாணமடி!

*எனக்கென்று நீ செய்த ரசத்தில்  
 கொஞ்சம் மணம் சேர்த்து சுவை கூட்டியதடி
 பொன் நிற சிறகாய்- நின் கூந்தலடி  

*கதவிடுக்கில் ஒளிந்திருந்து
 நோக்குகையில்                         
 பதற்றம் பறித்து கொண்டது- கொஞ்சம் நகங்களடி       
                                                               
*
குளக்கரை அரசரடியில்            
 கை கோர்த்து நடந்தோமே     
 இல்லாத பேய்கள் வாழ்த்துதடி

*முகவுரை முடிந்திருந்த காதலுக்கு
 மற்றுமொரு இடமாற்றம் கொண்டு
 முடிவுரை எழுதியது காலமடி
    
*
நம் உறவில் இன்னும் பிரியாமல் இருப்பது
 அந்த இறுதி கடிதத்தின் -இதழ்களடி 
     
*
மற்றொரு முறை விழிகள் பரிமாறும் வரை
 என்றும் ஒலிக்கும் நின் சிரிப்பொலியில்-
 வாழ்க்கை  நகருதடி.


நன்றி: இயக்குனர் ராம் மற்றும் படித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கும்.

---காத்திருக்கிறேன் விமர்சனக்களுக்காக

7 comments:

  1. நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. எளிதாக கருத்திட Word verification ஐ நீக்கவும்.

    ReplyDelete
  3. @முரளிதரன் :கருத்துக்களுக்கு மிக்க நன்றி,word verification ஐ disable செய்து விட்டேன் .

    ReplyDelete
  4. நல்லாருக்கு ....! ராமிற்கு ஏன் நன்றி ?

    ReplyDelete
    Replies
    1. muthal vari avarin thanga meengal padathil irundhu eduka pattathu.
      nandri :)

      Delete
  5. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் + இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-7.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete