Saturday, 21 February 2026
112.நாளைய பூக்கள்
Sunday, 15 February 2026
111.கைக்குட்டை
ஒற்றை சிறகிழந்த பட்டாம்பூச்சி
மலரின் அரவணைப்பில்
உறங்குதல் போல்
கற்றையான நிலவொளியில்
தலை புதைத்தேன் அவள் மடியில்.
அவளுள் அலட்சியாமாய்
நுழையும் காதல்
நான் வேண்டி கேட்டாலும்
மண்ணுள் தங்கமாய்
வியர்வையின் பதட்டமாய் வருகிறது.
கண்ணை மெல்ல மூடி
என்னுள் சத்தமாய்
கரைகிறேன் வலிகளாய்
மறைவிலிந்து இசைக்கும்
இசைத்தட்டு போல
என் சொல்லா சீழின்
மயிலிரகாய் அவள் கைக்குட்டை.
கோடி சேர்தலும் கோடி கண்ணீரும்
வீழ்ந்த இம்மண்ணில்
தீர்க்கமாய் சொல்வேன் அவளிடம்
பிடித்தது உன் ஸ்பரிசம்
காண்பதெல்லாம் நீயென.
உந்தன் அதீத அன்பை
வழிமொழிகிறேன் வர்ணணையின்றி
ஏனெனில்
இக்கண்ணாடி மனது
நூறாய் நூறினாலும்
அந்நூற்றிலும் நீயாவாய்.
Tuesday, 15 April 2025
110.தோழமை
மறைமதி இருளில்
நிழலினில் வேண்டினால்
முழு நிலவேன கூடாதோ நட்பு.
நட்பினை போல் ஓர் செயல் ஏது?
நட்பினை போல் ஓர் புரிதல் ஏது?
நட்பினை போல் ஓர் காவல் ஏது?
நம் நட்பு எல்லாமானது
கரம் பிடித்தவளின்
கைகளுக்கு பின்
தோழமை அல்லவா
தோள் சாய்க்கும்.
மதிப்பீடு எல்லாம்
தோற்று போகும் நிலை
-நட்பு
எழுத்து
எண்ணம்
சொல்
அனைத்தும் விலகி இருந்தாலும்
எங்கிருந்து முடித்தேனோ
அதிலிருந்து தொடங்குகிறேன்.
தீக்காயும் நிலை என் தோழமை பிரிந்த உறவும் நட்பாய் கூடும் காலம் முழுதும் தன்னலமிற்றி தொடர்வது நட்பு
வழமையான நட்பு வேண்டாம்
முன்பு நம் தோழமை
வானின் கீழ் யாதும் பகிரும் நட்பு
இருவரும் உரிமை கொண்டு
விவாதமாய் ஆலோசனையாய்
அக்கறையான நட்பு.
நான் யாது மறந்தாலும்
அன்னமிட்ட கை மறவேன்
அன்னையின் கருணை மறவேன்
என் பாலிட்ட நலன் மறவேன்.
கல் விழுந்து கலங்கிய மனம்
களை எடுத்து வந்திருக்கிறேன்
தெளிந்த நீரோடையில்
புதிய மலர்ச்சி.
வான் உயரும் பறவை
மண்ணை விட்டு விலகினாலும்
பறவை பறந்திட விடுவேனா
பேணி காத்த நட்பை மறவேனா?
தாகம் தீர்க்கும் நீர்
முதல் அருவியில் விழுந்தாலென்ன
நடு அருவியில்விழுந்தாலென்ன
நீரின் தன்மை மாறிடுமா?
இனிமையான இசையில்
மௌனம் அழகு
நம் தொடர் நட்பில்
இந்த மௌன இடைவேளை
முடிந்ததென தொடர்வோம்.
Sunday, 6 April 2025
109.கேள்விக்குறி
அறிவார் யாரும் உண்டோ என்றாய்
உங்கள் வலியும்
நான் அன்றோ சுமக்கிறேன் என்றாய்
என் செங்கண்ணீர் துளிகள்
உங்களுக்கா பாரம் என்றாய்
எல்லாவற்றையும் கேட்டேன் நிதானமாய்.
நான் வரிகள் வடிப்பேன்
என தெரியுமா?
என் விருப்பு வெறுப்புகள்
தெரியாது உனக்கு
நள்ளிரவில் நணையும்
என்னவளின் துயரம் அறியாது
ஆனால் எங்கள் எல்லோர் பாரத்தையும்
சுமைக்கும் சுமைதாங்கி நீ
நீ கடக்கும் முட்களில்
என் கடந்த கால இரத்தம் தோய்ந்திருக்கிறது
காதலில் வெல்வது மட்டும்
வாழ்க்கையாகிடுமா?
அல்லது காதலர் கதவணைகளில்
கவலைக்கு இடமில்லையா?
என் சிலுவையின் கணங்களை
என்று உன் தோளில் அறைந்தேன்?
என் அழ்மனதின் அழம் அறிவாயா நீ?
அவளும் நானும்
இன்றும் நாளையுமாய்
நற்செய்தி நினைந்திடும் ஓட்டம் தெரியுமா?
சேற்றில் இருப்பதால்
செந்தாமரை அழுவதில்லை
அருவமாக இருப்பதால்
காற்றும் கலங்குவதில்லை
உறங்கி படுக்க
உனக்கு தனியிடமுண்டு
வானமே கூரையாய்
வாழும் மக்கள் வலிகளை
கேட்க ஏதும் காதுகள் உண்டோ?
தூரச் சுமையை
பெரிதாய் காணும்
கண்கள் உனக்கு
துயில் துறக்கும் துயரா காதல்
அறுதியில் என்ன?
காதலில் முடிப்பது
மானுடத்தின் மைல்கல்லா என்ன?
இன்னும் எத்தனை இதயங்கள்
தீயிட்டு கொழுந்த
பின்பொரு நாள் காதலேனும் வெல்லுவாயின்
காலம் தோறும் நீ இழந்தவை என்ன?
கேட்கும் நிலையிலோ நீ இல்லை
கேள்வி குறியினில் முடியும் ஓர்
கவிதையுமில்லை.
Friday, 18 October 2024
கற்றது தமிழ்:BigBoss தமிழ் நாடகம்
Hi, வணக்கம்,
Youtube link of the original movie: https://www.youtube.com/watch?v=vAE6xvRMn34