ஒற்றை சிறகிழந்த பட்டாம்பூச்சி
மலரின் அரவணைப்பில்
உறங்குதல் போல்
கற்றையான நிலவொளியில்
தலை புதைத்தேன் அவள் மடியில்.
அவளுள் அலட்சியாமாய்
நுழையும் காதல்
நான் வேண்டி கேட்டாலும்
மண்ணுள் தங்கமாய்
வியர்வையின் பதட்டமாய் வருகிறது.
கண்ணை மெல்ல மூடி
என்னுள் சத்தமாய்
கரைகிறேன் வலிகளாய்
மறைவிலிந்து இசைக்கும்
இசைத்தட்டு போல
என் சொல்லா சீழின்
மயிலிரகாய் அவள் கைக்குட்டை.
கோடி சேர்தலும் கோடி கண்ணீரும்
வீழ்ந்த இம்மண்ணில்
தீர்க்கமாய் சொல்வேன் அவளிடம்
பிடித்தது உன் ஸ்பரிசம்
காண்பதெல்லாம் நீயென.
உந்தன் அதீத அன்பை
வழிமொழிகிறேன் வர்ணணையின்றி
ஏனெனில்
இக்கண்ணாடி மனது
நூறாய் நூறினாலும்
அந்நூற்றிலும் நீயாவாய்.
No comments:
Post a Comment