Tuesday, 22 October 2024

Sapta Sagaradache Ello Tribute: கண்கள்

A Poem Tribute to the warming story of "Sapta Sagaradache Ello" 


அவள் வாழ வேண்டுமென
விலகி வந்தேன்
புது வாழ்க்கை அமைந்ததென
அவளும் பிரிந்து சென்றாள்.

என் முடிவில் அவளுக்கு விருப்பமில்லை
அவளை அன்றி
எனக்கு வேறு யார் மீதும் நாட்டமில்லை.

இனியும் உன்னை பார்க்க மாட்டேன்
என சொல்லிவிட்டு தான் வந்தேன்
நான் அவளை மறந்துவிடுவேன்
என- எப்படி நம்பினாள் அவள்?.

நடு இரவில் விழித்தெழுபவன் 
காச நோயில் காய்பவன் மட்டுமல்ல
காதல் நோயில் மறக்கவியலா
மானுடனும் தான்.

கண்ணாடி விரிசல் நடுவே
அவள் கண்களை வரைந்தேன்,
கண்ணீர் கசிந்தது.

No comments:

Post a Comment