Sunday, 9 December 2018

உன் அருகில் பெண்ணே

இருள் விலக காற்றொன்று
மேகம் தனை விலக்கும்
வெண்ணிலவே உன் வானில்
இடம் தருவாயா?
கோடையில் மழை பார்த்து
புற்கள் எங்கும் சிரிக்கும்
அழகே உனை பார்த்து -பூக்களும் சிரிக்கிறதே
இப்புன்னகை எக்காலமும்
என்னோடு துணை வருமா?

நிற்காமலே நிகழ் காலமே
என் நினைவொன்று உனை சுற்றுதே

இராஜ ஹம்சாவில் ஏறி நீ -பறந்திட துணிந்தாய்
கருடனாய் உனை கவர்ந்தேன்
தீபிகா இக்கள்வனை அறிவாயா?
என் கைகள் உனை பற்ற
கடல்கள் ஏதும் பெரிதல்ல
மங்கையே என் மனம் உணர்வாயா?
பல கேள்விகள், வெறும் மவுனங்கள்
உன் வார்த்தையில் நாம் வாழ்க்கை
தொடங்கும் நாளும் வாராதோ?

நிற்காமலே நிகழ் காலமே
என் நினைவொன்று உனை சுற்றுதே
நிற்காமலே நிகழ் காலமே
சங்கீதா உன் முத்தம் கேட்குதே
உனை அணைத்த
நொடியொன்று போதும்
இதயம் தானாய் இடம் மாறுதே
காதல் இத்தனை மாயம் என்று
உன்னோடு சேர்ந்த பின்னே தெரிகிறதே.

Monday, 26 November 2018

SOU(L)

நிலவும் வானும் வந்து சேரும்
அந்த மாலை அந்நேரம்
என் அவளே உன் மடியில்
கொஞ்சம் சாயவேண்டி, தாயேன் என் வரம்.
நீயும் நானும், நெடுநேரம் நடந்தோம்
எங்கே முடியும், அந்த கடலின் ஓரம்
நதி ஓடை போலே
அதில் படகை போலே
உலகே மறந்து போகிறதே

Hey, எந்தன் தீபிகா
முன்னாடி வா என் காதல் சங்கீதா
முத்தம் பதிக்க வா
உன்கூட பறந்தே, வானில் போகனும் நான்
வா எந்தன் உயிர் தோழா
என்னோட ஆசை எல்லாம் நீயே நீ
உன் காதல் தரியா நீ
உன் காதல் தரியா நீ

என் கனவு தேவதையே
என்னை கட்டிக் கொண்டாளே
கொஞ்சம் இதயம் காணலையே
I'm in love with your body
And last night you were in my room
And now my bedsheets smell like you
Every day discovering something brand new
I'm in love with your body
Oh—I—oh—I—oh—I—oh—I
I'm in love with your body

Saturday, 24 November 2018

காத்திருந்த காதலி

காதலி பிரிவை எழுத
நிகண்டில் வார்த்தைகள் வேண்டினேன்
அவள் காத்திருந்த இரவுகளை
வெண்ணிலவே என்னிடம் சொல்வாயா?

அழகே, நீயில்லா வானம்
காற்றோடு கலைந்த மேகம்
காதலி எங்கே உன் கண்ணீர்த்துளி
அன்பிலா நெஞ்சம்
தாகங்கொண்டு தேடும்.

நீ இல்லாது இந்நொடி நிகழும்
தீச்சுடர் வடு பேசாது வலிக்கும்
பிரிந்திருக்கும் தனிமை
காணாது போல் கடக்கிறேன்.

நீ ஊட்டாத இரவு வேளை
உடன் கழிக்காத மாலைப் பூங்காற்று
என்னவாயிற்று என கேட்காத தலைவலி
நான் வாசிக்காது
நீ படிக்கும் இக்கவிதை
ஏதும் ஓர் நாள் வருமென
அனைத்தும் ஏந்தி கொள்கிறேன்
அதிகம் பிரியாது
சீக்கிரம் முத்தமிட வா.

Sunday, 7 October 2018

96

96 திரைப்படத்தின்  சில அசைவுகள்

ராம் அப்படி தான் இருந்திருப்பான்
கோபித்து சென்றாலும்
அவள் வரும் வரை காத்திருப்பான்
அவர்கள் விட்டு சென்ற நொடியில்
இன்னமும் நிற்கிறான்
நிடுவில் ஏதும் மாறவில்லை.

ஆசையாய் காதலித்தவளிடம்
ஏதும் கேட்க மாட்டான்
பார்க்கவும் தயங்குவான்.
இரவு முழுதும் தூங்காது
அவளுடனே சுற்றியிருப்பான்.
ஏக்கத்தோடு இவன் சுற்ற
அவள் மௌனமாய்
"யமுனை ஆற்றினில்" இரசித்திருப்பாள்.

எத்தனை ஆசையாய் இருந்தாலும்
அந்த சின்னஞ்சிறு விரல்களை
பற்றியிருக்க மாட்டான்.
அவள் இருக்கும் இடம்
எங்கிருந்தாலும் வந்திருப்பான்
அப்பொழுதும் பேசியிக்க மாட்டான்
இதயம் எத்தனை கதறினாலும்
சொல்லாமல் விலகியிருப்பான்.

அவள் மட்டும் அறிந்த ஒரு முகம்
இவனுள் இருக்கும்.
அவள் தொலைத்த ஒன்றை
இவன் பத்திரப்படுத்திருப்பான்.
அவள் இடம் மாறி செல்லகையில் கூட
இவன் பேசயிருக்க மாட்டான்.
வழியனைப்பும் முனையும் வரை
வாகனங்கள் எல்லாம் ஒதுக்கி வைத்து
அருகாமையில் அமர
மின்சார ரயிலை வேண்டிருப்பான்.
அவள் வலகி செல்லும் நிமிடம் வரை
இவன் உடனிருப்பான்.
அவள் அந்த நொடி நீள
இறுதி கணத்தில் யோசனைகள் பூக்கும்.
அப்பொழுதும்
அவள் அறியாது செறிக்கும்
காதலையும் கண்ணீர் துளிகளையும்
கேட்டிட வேண்டுமென
மௌனமாய் துடித்திருப்பான்.

அவள் கேட்டிருந்தால்
அங்கேயே கொட்டி தீர்த்திருப்பான்
ஆனால் அவள்
கேட்காமலே சென்றிருப்பாள்.
இறுதி வரை
இவன் வலிகள் சொல்லிட மாட்டான்.
எண்ணங்கள் அவனுள் ஆழுத்த
அவள் விட்டு சென்ற தடத்தில்
அமர்ந்து அழுதிருப்பான்
ஒரு வேளை பேசியிருக்காலம் என.
தனக்கும் சில கரையான்களுக்கும்
"பழைய வாசனை" என
சில நினைவுகளை பூட்டிவைத்திருப்பான்.




Saturday, 22 September 2018

பெண் மயில்

அன்று புகைவண்டி நிலையத்தில்
தேடி வந்தது உன்னையல்ல
அக்கணம் புதிதாய் பிறந்த
என்னைக் காண

காதலெனும் உச்சிக்கிளை எட்டாதென
உள்ளம் துறந்த நொடியில்
எங்கிருந்து வந்தாய் தேவதையே
உன் வழித்தடம் எங்கும்
காதலின் ஓசை தானா சங்கீதா?

எத்தனை கர்வம் தான் உன்னுள்ளடி!
என் கவிதைகள்
உன்னை முத்தமிட பொழுதெல்லாம்.

தீண்டி தான் பார்க்கிறாய் என்னை
பிடிவாதம் கொண்டு கண்ணாம்பூச்சி ஆடினால்
கார்த்திகை மழையில் கலாபம் ஒளிந்திடுமா?

தலை குளித்து
உந்தன் கூந்தல் விரிக்கையில்
எத்தனை ஆண் மயில் கவிழ்ந்ததடி!
பெண் மயிலே என்னை கவர்ந்தாய்
மனம் சிக்குண்டு கிடக்குதடி.
ஆண்மையின் வசியம் பெண்ணுள் முடிவது
ஆயுள் முழுதும்
உன்னோடு ஓர் கூட்டினில் வசித்தால் போதும்.

Friday, 21 September 2018

காற்றின் மொழி திரைப்படப் பாடல் போட்டி

சூழல்- இத்தனை நாட்கள் குடும்பத்திற்காக வாழ்ந்த மனைவி தனக்கென வாழத் தொடங்குகிறாள். அவளுடைய வெற்றியில் மகிழ்ந்தாலும், அவளுடைய இன்மையை உணர்ந்து கணவனின் மனதில் எழும் உணர்வுகளே இந்தப் பாடல்.
கனவுகளை தேடிப்பறக்கும் மனைவிக்கு வாழ்த்தாகவும், தன்னுள் எழும் வெறுமையையும் இந்த பாடல் பதிவு செய்ய வேண்டும்.


காதல் மடியே....
விடியற் காலம் உன்னை அழைக்கிறதே
விழியோரக் கண்ணீர்த்துளியே
உன் சிறகுகள் விரித்துக் கொள் அன்பே.

தீண்டிய விரல்கள் தனியே ஏங்கி
மீண்டும்  தழுவிட காத்திருக்கும்
பிரிந்து வாழ்வோம் வேலை நேரம்
இரவு வந்து காதல்  வேட்கும்

காலதர் வழியே காற்றை நிறுத்திக்கேள்
தனிமையான பேருந்து நிறுத்தங்கள்
நாம் கழித்த கதைகள் பேசியிருக்கும்.

உறவொன்று வந்திட ஏங்காதே
கரம் கொண்ட கணம்-
பாரங்கள் என்னோடு கலங்காதே
எனக்கென கரு சுமந்தாய்
இன்று கூட்டினை
நான் ஏந்திக்கொள்கிறேன்

சமையலறை வெப்பம்
இனி என் வியர்வை சுவைக்கட்டும்
கொடியில் உலரும் உடைகள்
உன் வாசம் வீசட்டும்
பாதி மடித்த "அலை ஓசை"
உனது அழைப்பு மணிவரை ஒலிக்கட்டும்

வாசல் வரும் வசந்தம்தனை
வரவேற்று செல்லடி என் கண்மணி
வேர்க்கை துளியினுள் வேட்கைக் கொண்டு
வேள்வியில் "ஜோதிக் கா"ணும் வேளையடிக் கிளியே
சூரிய ஒளியென
துணையாக நானிருப்பேன்
வாகை சூடிவா என் மலர்க்கொடியே.



Sunday, 16 September 2018

இதயக்குறிப்பு

தினமும் கனவுல
எங்கயோ முட்டுது மூச்சு
சிருள் முடிக்காரிக் காதல்ல
நல்லா தான் சிக்கிகிச்சு மனசு
பேசாம ஒரு நாள் தூங்கிட்டேன்
விடியுற முன்னாடி அலறிச்சு
- என் வாட்ஸாப்பு

பெங்களூர் பொண்ணு
மயக்குறா நின்னு
பெரும் காதல் வீசுதுப் பாரு கண்ணு
இந்த மறதிக்காரனுக்கு மடியொன்னு
அந்த சங்கீதா மனசுல "வைத்தி"ருக்கும்
எந்த கடையில தான் விக்கும்
சட்டை நூலா அவ நினைப்பு!

கடிகார முள்ளப் போல
வெளந்தி புள்ள அவள சுத்தி வரேன்
சண்டிக்காரி சாவிக்கொத்தா
கோயம்பேடுல என்னை இணைச்சா
கூடயே வருவேன்னு சொல்லிவிட்டா
பரிசம் போட்டிருப்பேன் நெஞ்சுல!

தெரிஞ்சு தான் விட்டுடு வந்தேன்
என் டெட்டி பொம்மைய
இங்க எவளும் இல்ல
அவளப் போல என்ன கொஞ்ச
தீபக்குளம் நெறஞ்சிருக்கு நீரோட
தீபிகா எப்போ நீ வருவ விளையாட?