Saturday, 26 September 2020

SPB (Soulful Play Back Singer)

 உங்கள் பாடல் அனைத்தும்
தமிழ் ஒலியின் உச்சம்
எளிய மனிதரின் 
உள்ளத் திறவுகோல் உங்கள் குரல்
ஏன் ஐயா எங்களை விட்டு சென்றீர்?
பூவுலகு போதுமென
இறைவனே கவர்ந்து சென்றாயா
எங்கள் இசைப் பேழையை

வானொலியில் சிறிகடித்த எங்கள் வானம்பாடியே
இந்நாள் வரையில் உங்கள் பாடல் 
எந்தன் சுமைதாங்கி வந்தது 
உங்கள் மறைவின் சுமையை
எதை கொண்டு தாங்குவதையா?
மூச்சு விடாமல் பாடியவர் நீங்கள்
இன்று மூச்சை நிறுத்தி கலங்க வைக்கிறீர்கள்
மீண்டும் எழுந்து பாடுங்கள் அய்யா

உங்கள் குரல் கொண்ட இசை
இறவா இராகம்
"கண்களில் என் இந்த கண்ணீர்"
பொய்யான வார்த்தைகளால்
ஆற்றிட தோற்கிறேன் என் புன்னகை மன்னனே
ஆசை வந்து எம்மை ஆட்டிவைக்கிறது
இனி "உம்மை நினைத்து" 
யார் இங்கு பாடுவாரோ?

மண்ணில் உதித்த ஒப்பில்லா பாடகனே
உந்தன் இறுதி ஊர்வலத்தில் பூக்களை அல்ல
இராகங்களை தூவ வேண்டும்
எங்கள் இதய கீதத்திற்கு
கோடி இதயம் உங்கள் குரல் கேட்க வேண்டுகிறோம்
விரைவில் தோன்றவா எங்கள் பாடல் அரசனே.