Friday, 14 February 2020

அந்த தீராநதி ஓடந்தனிலே

உன் பாதம் தழுவி
காதல் பற்றி
கொஞ்சியதே என் கண்கள்
காணாமற் நழுவி சென்றாய்
கொலுசே நில்லாயோ.

நித்தம் நிறைய
முத்தம் பதிய
வேண்டிடுமே என் இதழ்கள்.
கரு மை தீட்டி
கனவை தீண்டி
சிலையென நின்றாயே.

இரவு பொழுது
நிலவின் மடியில்
தனியே உனை வேண்ட
உந்தன் நெற்றி பொட்டில்
வீழுந்து விட்டேன்
வருடியதே பொற்கூந்தல்.

தேன் வடிக்கும் நிலவே
எனை தேடி வந்த அழகே
காதல் எறிந்த
குளத்தினுள்ளே, முழ்க வேண்டும் சகியே.

தேன் வடிக்கும் நிலவே
எனை தேடி வந்த அழகே
காதல் எறிந்த
குளத்தினுள்ளே, முழ்க வேண்டும் சகியே.

மார்கழி விடியலோ
மலர்களின் குவியலோ
என் இதயமெங்கும் ஓரசை
உந்தன் இசையோ.

உலகம் சிறியதே
சிறகுகள் விரிந்ததே
கூடி பறக்க உலகம் ஓர்
காலடியில் விழுமே.

என் விடுகதையின் புதிரே
சரிகிறேன் உன் எதிரே
மீட்கவா ஏற்கவா தீபிகா

நதியோர நாணலை
வேய்வெனே கூரையாய்
அதனினுள் உன் நாணமது
அடங்கிதான் விடுமோ?

தேன் வடிக்கும் நிலவே
எனை தேடி வந்த அழகே
காதல் எறிந்த
குளத்தினுள்ளே முழ்க வேண்டும் சகியே.