Friday, 20 December 2019

விது

அணுவளர் மழலை செல்வமே
எங்கள் மடியில் தவழும் அருணை தேவதையே
தாரகை தனை கொஞ்சிட
நிலவும் மேகம் எட்டி பார்த்ததோ
ஆம்பல் மலர் கூட்டம் தோழியொன்று கொண்டதோ.

புன்னகை குவியமே உனை ஏந்திட
உறங்கா விழிகளின் வலி யாவும் பறந்திடுமே
அரும்பே கொஞ்சம் உறக்கம் கொள்
நீ களம் காண
கனவுகள் பல காத்திருக்கிறது.

பிறந்த கணமே
வெற்றிச்செல்வி கைகளில் தழுவினாய்
வலிகளை துறந்து
புது வரலாறு படைத்திடவா
விதுவளர் ஒளியே ஒளிவளர் விதுவே
எங்கள் விதுஓளியுற
நாங்கள் மகிழ்ந்திடுவோமே.

Friday, 13 December 2019

மெய்யெழுத்து

மனைவிற்காக மெய்யெழுத்தே இல்லாமல் ஓர் கவிதை

மனைவியே எனது அருமையே உனை எழுதாத நேர வெளி தீராது பிணையே
காதலிதனை தழுவாத வலி
வளி புகா நுரையிலென நினை வெருவி புரையோடி  மருகி விழுவதே

நிலவு மகளென நீ ஒளியாக உசாவினாயேயடி
எனது இடுதிரை விலகி அரசியே உனை இசையுருகி ஊனை கெழுதி அதை பாடி அதர வழியே அருணை இதயமோடு நிறைவுறுவேனாக!