Friday, 20 December 2019

விது

அணுவளர் மழலை செல்வமே
எங்கள் மடியில் தவழும் அருணை தேவதையே
தாரகை தனை கொஞ்சிட
நிலவும் மேகம் எட்டி பார்த்ததோ
ஆம்பல் மலர் கூட்டம் தோழியொன்று கொண்டதோ.

புன்னகை குவியமே உனை ஏந்திட
உறங்கா விழிகளின் வலி யாவும் பறந்திடுமே
அரும்பே கொஞ்சம் உறக்கம் கொள்
நீ களம் காண
கனவுகள் பல காத்திருக்கிறது.

பிறந்த கணமே
வெற்றிச்செல்வி கைகளில் தழுவினாய்
வலிகளை துறந்து
புது வரலாறு படைத்திடவா
விதுவளர் ஒளியே ஒளிவளர் விதுவே
எங்கள் விதுஓளியுற
நாங்கள் மகிழ்ந்திடுவோமே.

Friday, 13 December 2019

மெய்யெழுத்து

மனைவிற்காக மெய்யெழுத்தே இல்லாமல் ஓர் கவிதை

மனைவியே எனது அருமையே உனை எழுதாத நேர வெளி தீராது பிணையே
காதலிதனை தழுவாத வலி
வளி புகா நுரையிலென நினை வெருவி புரையோடி  மருகி விழுவதே

நிலவு மகளென நீ ஒளியாக உசாவினாயேயடி
எனது இடுதிரை விலகி அரசியே உனை இசையுருகி ஊனை கெழுதி அதை பாடி அதர வழியே அருணை இதயமோடு நிறைவுறுவேனாக!

Friday, 5 April 2019

Lifecycle of IT guy

எனக்கு மிகவும் பிடித்த பாடல் - "சிப்பி இருக்குது"
இயல்பாய் ஓர் காதலன் காதலி உரையாடுவது போல அப்பாடல் தழுவிச் செல்லும்.
அதை நானும் வாழும் IT சூழ்நிலையோடு எழுதியிருந்தால் எப்படி என சிறு கற்பனை.

தந்தன தத்தன
தையன தத்தன
தனன தத்தன
தான தையன தந்தானா

ஆஹான்
Ticket இருக்குது
Task இருக்குது
Assign பண்ண நேரம் இல்லடி ராஜாத்தி

லல லலலல
லல லலலல
லல லாலல
லாலல லலலா லாலாலா

Request இருக்குது
Change இருக்குது
Approve பண்ண நேரம் இல்லடி ராஜாத்தி
....

Ticket இருக்குது, Task இருக்குது
Assign பண்ண நேரம் இல்லடி ராஜாத்தி
Request இருக்குது. Change இருக்குது
Approve பண்ண நேரம் இல்லடி ராஜாத்தி

Requestor நீ ஆனால்
Assignee நான் ஆவேன்.

நனன நானா
ம்ம்ம்
நனன நானா
Client escalation

தர நன தரர நானா
அந்த மெயில் எனக்கு மட்டும்

ஓகே

தானே தானே தானா
அப்புடியா
வேண்டும் FF ID

தத்தன தன்னா
நினைக்க வைத்து
நான லல லலல லாலா
Breach ஆக SLA நெருங்கி வந்து

நநன நநன னா
தன னா லல லா தன னா
Closure தந்தது யார்
User ஓ Business ஓ manager ஓ

Ticket இருக்குது, Task இருக்குது
Assign பண்ண நேரம் இல்லடி ராஜாத்தி
Request இருக்குது, Change இருக்குது
Approve பண்ண நேரம் இல்லடி ராஜாத்தி
Requestor நீ ஆனால்
Assignee நான் ஆவேன்.

தனன தனன நானா
மழையும் வெயிலும் என்ன
தன்ன நானா தனன நன்னா நன்னா
Support project-ல் பகலும் இரவும் என்ன

தனன நானா தனன நானா தானா ஆ
Server restart செய்து fix செய்த issue

IT உலகம் கெஞ்சும்
உன்னைக் கண்டால், Appreciation Mail-லும் கொஞ்சும்
கொடுத்த coding-ல்
என் மனதை நீ அறிய நான் உரைப்பேன்.

கொடுத்த coding-ல்
என் மனதை
நீ அறிய
நான் உரைத்தேன்.

கொடுத்த coding-ல்
என் மனதை நீ அறிய நான் உரைப்பேன்.

Thursday, 3 January 2019

காதல் தடம்

நிற்க வைத்து தான் சென்றேன்
என் அழகிய சிலையே
உன்னை இமை கொட்டாது
செம்புல மேனி ரசிக்காது
பேருத்தில் நீ செல்கையில்
தடம் பிழர்ந்து
காதலாகி நிற்றேன் நான்

மேடைகள் ஏதும் விரும்பாது
திருப்பி அனுப்பிய கவிதை இது
நீ மட்டும் எதற்கு ஏற்க வேண்டுமென
தனியே நின்றேன்
இன்று கூட
நான் செல்ல விரும்பும் நெடுந்தூரம்
உன் மடியாய் இருக்காதாயென
பனியில் வேண்டுகிறேன்
ஆனால் எப்பொழுதும் போல்
உன் கண்ணாம்பூச்சியில்
தோற்றேப் போகிறேன்.

கடல் மீது பனிப்பொழிந்தால்
காண்போர் எவரும் உண்டோ கண்மணி?
நீ இன்றி ஏதும் வருகையில்
அதை இன்பமாய் ஏற்குமோ என் மனம்?
விலகி நின்று
புகைப்படமாய் சிரிக்கும் உலகம்
என் கண்ணீர் துடைக்க கைகள் தருமா?

என்னை தவிர்க்கும் உலகம்
தனித்தனியே வெறுத்து
சேர்ந்தே சிரிக்கிறது
அவர்களிடத்து வஞ்சம் தனை
என்னிடத்தில் அண்டாது
உன்னை கேட்கிறேன்.

நான் கேட்கும் பதில்தனை
மேள ஓசையோடு சத்தமாய் சொல்வாயா?
அழுகுரலுக்கும் தனிமைக்கும்
அமைதி தோன்றினால்
பெண்ணே அது
உன் காதலாகி அணைக்குமோ?

மணநாள் சூடம்
வேளையொன்று சொல்லடி
உன்னை மெய் மறந்து சூடிகொள்வேன்
காத்திருந்த வேளையனைத்தும்
காதலாகி பெருகி வரும் கண்மணி.