Thursday, 23 August 2018

விடியட்டும் காதலியே

என்னவளே
என்றேனும்  ஓர் நாள்
உன்னோடு பேசிட வேண்டும்.

முதன் முதலாய் கடற்கரையில்
நட்பினை கேட்டிருக்க வேண்டும்
என்னோடு கைக் கோர்த்து வாயென
மறுமுறை மனம் திறந்திருக்க வேண்டும்.

எதிரெதிரே இரயில் பிரியும் இடத்தில்
நாமிருவரும் இணைந்து பேசிருக்கலாம்
பேருந்து நிறுத்தமதில்
பிரிவுனை அணைத்த கையோடு
தோழியே துணைவியாக வேண்டிருக்கலாம்.

நீ கழித்த நொடியினில்
நான் வாழ்ந்து பார்த்திட
நமக்காய் நேரம் கூட பின்னோக்கி செல்கிறதோ?
உன் பாதை தேடி
என் தடம் பதிந்திட
கடற்கரை மணலாய் காதலும் சேர்கிறதோ?

என்னை பார்க்கும் பொழுதெல்லாம்
அடை மழை பொழிவதேனோ?
பொழியவில்லை எங்கும் என்பாய்.
எங்கே பொழிவில்லை?
மண்ணிலா? மங்கையின் கண்களிலா?

என் வலிகளுக்கு உறக்கம் உண்டெனில்
உன் மடியினில் உறங்க சொல்லியிருப்பேன்
நமது தூரமது காதிகமெனில்
கவிதைகள் எழுதி நிரப்பிருப்பேன்.

நான் தினமும் கடக்கும் சாலையில்
பசியோடு ஒருவன்
பழம் விற்று கொண்டிருக்கிறான்
எத்தனை காதல் உள்ளிருந்தென்ன காதலியே
உன் நெற்றி முத்தம் இன்னும் காத்திருக்கிறதே.

தனிமை இரவுகள்
எப்பொழுது விடியுமென
கனவுகளில் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.

Tuesday, 7 August 2018

நரவலி

நரவலி- Become weary or tired, as with waiting

இன்றும் வெறும் வானை
பார்த்தே கழிக்கிறேன்
எனக்கு இருள் படைத்த அதே வானம்
உன்னிடம் பகல் காட்டிச் சிரிக்கிறது.

இன்னும் எத்தனை திங்கள்
நீ இல்லா இரவொடு கழித்திட?
இன்று போய் நாளை வரும்
அதுவும் ஒர் தனிமையென கடந்திடும்.

உன் காதல் என்னை செதுக்காமலே
நித்தமும் உடைகிறேன் தெரிகிறதா?
தனிமை என்னை
மலையின் உச்சியிற்கு அழைக்கிறது
நான் விழுந்திட உன் பிரிவொன்று கொள்ளவா அன்பே?

நீ கொண்ட கண்ணீரின்  எளிதாய்
உன்னை காதல் கொள்ள முயன்று தோற்கிறேன்
சிதறி மண்ணில் விழுந்தேன்னெனில்
உன் கண்ணீராய் கலந்திட வேண்டுகிறேன்
கைகள் அதனை துடைக்கையில்
இந்த உயிரினை தாங்கிடு போதும்.

கண் பார்க்கும் காட்சி அனைத்தும்
நீ ரசிக்க வேண்டுமென, ஏனடி அடம் எனக்கு?
என்னோடு நீயும் இருப்பதாய்
தன்னையே வாட்டுகிறேனடி சுழலி
எத்தனை இருக்கை தனிமையாய் அழைத்து
உனக்கென காத்திருக்க சொன்னால் என்ன ?
வேறொரு காதலர்கள் அங்கே முத்தமிட
சிரித்துக் கொண்டே கடந்திட வேண்டாமா சங்கீதா.