Friday 14 October 2016

தோழி

என் விழி பூக்களில்
உன் பிம்ப துகள் கழிந்து
இன்றோடு ஒரு திங்கள் முடிகிறது.

சுடும் பகல் தேடும்
திங்களின் அருமை
தோழியின் அருமை -பிரிவில்

துயரின் வலிதனை
என்னுள் ஏற்றிவைத்து
பயண சுமைதனை நீ வைத்துக்கொண்டாய்
வாழ்வின் வழிதடத்தில்
எங்கேனும் வைத்திருக்கிறாயா
நம் நினைவின் நிழற்படம்?

உறவில்லா சிப்பியென
கடலில் ஒளிந்திருந்தேன்
கவிதை பவழம் கோர்க்க வைத்தாய்
மாலை  வந்து சேரும் முன்பே
ஏனடி விண்மீன் தனை களவாடினாய்.

முக்கடல் சுழ
குடாநாடென உயர்ந்திருந்தேன்
முறிவின் முனையில்
எம் மனம் உடைந்ததடி
ஏனடி தீவாய் விலகிச்செல்கிறாய்.

கலங்கும் உன் கண்கள் துடைக்க
எதிரே என் கைக்குட்டையில்லை
புத்தரை போன்ற மௌனத்தை வடிக்க
நான் ஒரு கவிஞனில்லை

யாருமற்ற உலகினில் யாரோ ஒருவரென
படிக்கும் இளவஞ்சியே
தன்னை விடுத்து உன்னுள் நோக்கினால்
என் பெயர் எஞ்சியிருக்கும்

காதலி எனில்
காத பக்கம் எழுதி இருப்பேன்
அதற்கும் மேல் ஒரு தோழி நீ

2 comments:

  1. அற்புதமான கவிதை !
    "புத்தரை போன்ற மௌனத்தை வடிக்க
    நான் ஒரு கவிஞனில்லை" - என்ற வரிகள் சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை

    ReplyDelete
    Replies
    1. Thanks a lot for words ramesh
      //புத்தரை போன்ற மௌனத்தை வடிக்க
      நான் ஒரு கவிஞனில்லை//
      அதாவது அவளுடைய மௌனத்தை எழுத்தில் கவிதையாய் எழுதும் அளவிற்கு அவன் கவிஞன் இல்லை என்று எழுதிருக்கிறேன்

      Delete